வெற்றிமாறன் கண்ணுல எதோ பிரச்சனைனு நெனைக்கிறேன் – ராஜராஜ சோழன் சர்ச்சையில் குஷ்பூ பதிலடி.

0
461
kushboo
- Advertisement -

ராஜ ராஜ சோழன் குறித்து வெற்றிமாறன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அவரின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்புகலும் கிளம்பி இருக்கிறது. வெற்றிமாறனின் இந்த கருத்திற்கு பல பா ஜ க பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகை குஷ்பூவும் வெற்றிமாறனை விமர்சித்து அவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவானதில் இருந்து ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்களும் அவர் எந்த மதத்தை சார்ந்தவர் போன்ற விவாதங்களும் சமூக வலைதளத்தில் அடிக்கடி நடந்து கொண்டு வருகிறது.

-விளம்பரம்-
ponniyin

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை அவருடைய கட்சியினர் கொண்டாடி இருந்தார்கள். இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர் ‘சினிமா என்பது வெகுமக்களை மிக எளிய மக்களை சென்றடைய கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிகவும் முக்கியம்.

- Advertisement -

இதையும் பாருங்க : நயன் கூட இல்லை, லூசு பெண்ணே பாடலை அவரை நினைத்து தான் எழுதினாராம் சிம்பு – அவரே சொன்ன வீடியோ.

திராவிட கையில் சினிமா :

திராவிடம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று நிறைய பேசினார்கள். ஆனால், மக்களில் இருந்து விலகி எந்த கலையும் முழுமை அடையாது. மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். ஒருவேளை நாம் இன்று அதை தவறினால் ரொம்ப சீக்கிரமாக நிறைய அடையாளங்களை இழந்து விடுவோம்.

-விளம்பரம்-

ராஜ ராஜ சோழன் குறித்து வெற்றிமாறன் :

வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்படுவதாக இருக்கட்டும் ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவது இருக்கட்டும் என்று பல அடையாளங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது சினிமாவிலும் நடக்கும்.சினிமாவிடம் இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.

குவியும் எதிர்புகள் :

வெற்றிமாறனின் இந்த பேச்சுக்கு ஆதரவு ஒரு பக்கமும் எதிர்ப்புகள் ஒரு பக்கமும் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட இயக்குனர் பேரரசு வெற்றிமாறனின் இந்த கருத்திற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்ததோடு ராஜராஜ சோழன் இந்து அல்லாமல் அவர் என்ன முஸ்லிமா இல்லை கிறிஸ்துவரா என்றும் கேள்வி எழுப்பு இருந்தார். இப்படி ஒரு நிலையில் வெற்றிமாறன் கருத்திற்கு கருத்து தெரிவித்து இருக்கும் குஷ்பூ : –

குஷ்பூ பதிலடி :

‘தன் மனதில் என்ன இருக்கிறதோ, உலகத்தை எந்த பார்வையில் பார்க்கிறீர்களோ உங்களுக்கு அப்படித்தான் தோணும். வெற்றிமாறன் சார் பற்றி நான் ஒன்னும் சொல்ல விரும்பவில்லை. உங்களுடைய பார்வையை நீங்கள் மாத்திக்கணும். எல்லாத்துலயும் ஒரு தப்பு கண்டுபிடிக்கணும், தவறு கண்டுபிடிக்கணும், நான் என்னுடைய பார்வையில், என்னுடைய நோக்கத்தில் மட்டும் தான் பார்ப்பேன், உலகம் எப்படி இருக்கிறது என்று நான் பார்க்க மாட்டேன் என்று சொன்னால் அது அவருடைய துரதிஷ்டம் என்று சொல்வேன். உலகம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் பார்க்க வேண்டும். அவர் பார்வையில் எதோ குறை இருக்குன்னு நெனைக்கிறேன் என்று பேசியுள்ளார்.

Advertisement