நயன் கூட இல்லை, லூசு பெண்ணே பாடலை அவரை நினைத்து தான் எழுதினாராம் சிம்பு – அவரே சொன்ன வீடியோ.

0
199
simbu
- Advertisement -

இந்த நடிகையை நினைத்து தான் லூசு பெண்ணே என்ற பாடலை சிம்பு எழுதி இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். அதன் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

சிம்பு நடித்த படம்:

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெளியாகி இருந்த படம் மகா. இந்த படத்தின் நாயகியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருந்தது. தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இந்தபடத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

சிம்பு நடிக்கும் படம்:

படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள பத்து தல படத்தில் சிம்பு நடிக்கிறார். இந்த படம் கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக். இந்தப் படத்தில் இயக்குனர் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

வல்லவன் படம்:

இந்த படத்தை ஞானவேல் ராஜா தன்னுடைய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரித்து இருக்கிறது. இந்நிலையில் சிம்புவின் லூசு பெண் பாடல் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இயக்குனர் சிலம்பரசன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படம் வல்லவன். இந்த படத்தில் சிம்புவுடன் நயன்தாரா, ரீமாசென், சந்தியா, சந்தானம், பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

லூசு பெண்ணே பாடல் குறித்த வீடியோ:

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற லூசு பெண்ணே பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இந்த பாடலை சிம்புவே எழுதி பாடியிருந்தார். இந்த பாடலை சிம்பு அவர்கள் நடிகை திரிஷாவை நினைத்து தான் எழுதினாரான். இதை பேட்டியில் அவரே சொல்லிவிட்டு விளையாட்டுக்காக, சும்மாதான் சொன்னேன் என்று கூறியிருக்கிறார். இப்படி பல வருடங்களுக்கு முன் கூறிய சிம்புவின் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement