கோவில், ரத்தத்தில் கடிதம், திருமண டார்ச்சர் – சின்னத்தம்பி படத்தால் குஷ்வூவிற்கு ஏற்பட்ட அன்புத் தொல்லைகள்.

0
1265
kushboo
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Buy Ilaiyaraaja - Chinna Thambi (Vinyl) @ Just ₹1,200 - MusicCircle

இவர் தமிழ் சினிமா திரை உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். நடிகை குஷ்பு திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். குஷ்பூ முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானது தர்மத்தின் தலைவன் படம் மூலம் தான். அதன் பின்னர் தான் வர்ஷம் 16 படத்தில் நடித்தார்.

இதையும் பாருங்க : கமண்டுகளால் கடுப்பான ஐஸ்வர்யா ராயின் Xerox – இவங்க தான் இப்போ படத்துலேயே நடிக்கிறாங்களே.

- Advertisement -

ஆனால், குஷ்பூவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஏற்பட்டது ‘சின்னத்தம்பி’ படத்தின் மூலம் தான். இ1992ஆம் ஆண்டு பிரபு – குஷ்பூ நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த படம் சின்னத்தம்பி. இந்த படம் அன்றைய நாளில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இந்த படத்தில் பிரபு, குஷ்பூ, மனோரமா, கவுண்டமணி, ராதாரவி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ளார் குஷ்பூ.

அதில், இந்தப் படம் வெளியான பின்னர் தான் தமிழ்நாட்டில் எனக்கு கோவில் கட்டினார்கள் ஞாயிற்றுகிழமைகளில் வீட்டு வாசலில் பஸ்ஸில் ரசிகர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் கிட்டத்தட்ட ஆயிரம் பேராவது வருவார்கள் இதனால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஆகக்கூடாது என்று ரசிகர்களிடம் வர வேண்டாம் என்று சொல்லி விட்டேன் அது மட்டுமல்லாமல் ரத்தத்தில் கடிதம் எழுதி உங்களை கல்யாணம் பண்ணுவேன் என்று வீட்டு வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள் எல்லாத்துக்கும் மேலாக திருவிழாவில் தொலைந்து போன எங்க குழந்தை குஷ்பு’னுலாம் சொல்லிட்டாங்க. நிறைய தர்ணா போராட்டாம்லாம் நடந்தது. நிறைய விஷயங்கள் ‘சின்னதம்பி’ ரிலீஸூக்குப் பிறகு நடந்தது. 

-விளம்பரம்-
Advertisement