ஒரு வார்த்தை போடாததால் அர்த்தம் மாறியது. மன்னிப்பு கேட்ட நடிகை குஷ்பூ.

0
4846
kushboo
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-
Khushbu

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில், பிரபல நடிகை குஷ்பூ சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் வொர்க்கவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “வொர்க்கவுட் செய்ய ஜிம்மிற்கு தான் போக வேண்டும் என்பது இல்லை. லாக் டவுன் டைம் என்பதால் வீட்டிலையே இருந்து வொர்க்கவுட் செய்யலாம்” என்ற ரீதியில் குறிப்பிட நினைத்து அதில் ‘not’ என்ற வார்த்தை போடாமல் விட்டதால். “ஜிம்மிற்கு போய் தான் வொர்க்கவுட் செய்ய வேண்டும்” என்று அதன் அர்த்தம் மாறி விட்டது.

-விளம்பரம்-

இதற்கு பலரும் கமெண்ட்ஸ் போட்ட வண்ணமிருந்தனர். தற்போது, இதற்கு குஷ்பூ மன்னிப்பு கேட்டு “ஜிம்மிற்கு போக வேண்டாம்” என்று தான் அதில் குறிப்பிட வந்தேன் என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். இப்போது ‘அண்ணாத்த’ என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை குஷ்பூ. இந்த படம் அவருக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தினை பிரபல இயக்குநர் சிவா இயக்குகிறார்.

Advertisement