ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி குறித்த சர்ச்சைக்கு குஷ்பு பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.
தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகி விடும். இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி:
அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருந்தது. ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் தேங்கி இருந்தது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தார்கள். மேலும், இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மானும் சமூக வலைத்தளங்களில் மன்னிக்கவும் கேட்டிருந்தார்.
நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்:
தற்போது அந்த இசை கச்சேரி ஞாயிற்று கிழமை நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் மக்கள் அவதிப்பட்டனர். பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 10000 ரூபாய் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்று பலரும் புலம்பி இருக்கின்றனர்.
ரசிகர்கள் வருத்தம்:
மேலும், இந்த முறை திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் என்று உற்சாகத்தில் இருந்தார்கள். ஆனால், கூட்டம் தான் ஆட்டு மந்தைகளைப் போல அதிகமாக இருந்தது. இது ரொம்பவே வருத்தத்தை அளிக்கிறது. அதோடு பல்லாயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியும் பல பேருக்கு நிகழ்ச்சியை பார்க்க அனுமதி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்று இருக்கின்றனர். இப்படி இது தொடர்பாக ரசிகர்களும் சோசியல் மீடியாவில் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து ரகுமான் ரசிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.
Heard about the major chaos and difficulties faced by #ARR fans at the chennai concert. Rahman has always made sure his fans are never disappointed. My daughter and her friends were among those who were denied entry despite a Diamond pass. It took them over 3 hours to reach the…
— KhushbuSundar (@khushsundar) September 12, 2023
குஷ்பூ டீவ்ட்:
அதோடு இந்த சர்ச்சை தொடர்பாக பிரபலங்கள் பலருமே ரகுமானை விமர்சித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர் ரகுமானுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை குஷ்பூவும் ரகுமானின் இசை கச்சேரி குறித்த சர்ச்சைக்கு டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், என்னுடைய மகளும் இசைக்கச்சேரிக்கு முறையாக அனுமதி வாங்கி சென்றிருந்தார். ஆனால், அனுமதி அவருக்கு கிடைக்கவில்லை. கேட்டுக்கு செல்வதற்கு மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. ஆனால், டைமண்ட் பாஸ் வைத்திருந்தும் என் மகள் மற்றும் அவர் தோழிகளை அனுமதிக்கவில்லை. இந்த பிரச்சனைக்கு ஏ ஆர் ரகுமான் காரணம் இல்லை. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் சரியான மேனேஜ்மென்ட் செய்யாததே இதற்கு காரணம் என்று கூறி இருக்கிறார்.