கடந்த வாரம் முழுவதும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பேச்சுப் பொருளாக இருந்தது ‘லட்சுமி’ என்ற குரும்படம் தான். மாறி மாறி அனைத்து தரப்பினரும் விமர்சிக்க, தற்போது அந்த குறும்படத்தில் ஹீரோயினாக நடித்த லட்சுமி ப்ரியா ஃபேமஸ் ஆகிவிட்டார். பலரும் அவருக்கு ரசிகர்களாகவும் மாறிவிட்டனர்.
ஆனால், அவரு யாருடைய ரசிகை எனத் தெரியுமா? அவர் உலக நாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகை ஆவார். நவ்.7 ஆம் தேதி கமல்ஹாசன் தனது 62ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். கமல்ஹாசனை தனது குருவாக ஏற்ற லட்சுமி ப்ரியா. அவரைப் போலவே பல்வேறு கெட்டப்பில் நடித்து அந்த வீடியோவை ஒர்ஜினலுடன் சேர்த்து ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட்டார்.
அந்த வீடியோ தற்போது பிரபலமாகி வருகிறது.அந்த வீடியோவில் குரு த்ரோனாச்சாரியாருக்கு இந்த ஏகலைகவனின் தட்சனை என பதிவிட்டு வெளியிட்டிருந்தார் லட்சுமி.