திருமணத்தில் நம்பிக்கை இல்லை.! ஆனால், லிவிங் டுகெதர்.! லட்சுமி மேனன் ஓபன் டால்க்.!

0
844
Lakshmi-menon
- Advertisement -

தமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அப்படி வந்தவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் மூலம் தென்னிந்திய திரையுலகை கலக்கும் நயன்தாரா. அதே தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனவர் லட்சுமி மேனன்.

-விளம்பரம்-

தமிழில் இன்னும் முன்னணி நடிகர்களுடன் கை கோர்க்கும் நேரம் இவருக்கு இன்னும் கூடி வரவில்லை. தற்போது பிரபு தேவாவுடன்
யங் மங் சங் படத்தில் நடித்து வருகிறார். சிறு வயதிலேயே திரை துறைக்கு வந்த லட்சுமி மேனன் நடிகர் விஷாலை காதலிக்கிறார் என்ற செய்திகள் கூட பரவியது.

- Advertisement -

ஆனால், வழக்கம் போல அந்த செய்தியை இருவருமே மறுத்து வந்தனர். சமீபத்தில் லட்சுமி மேனனுக்கு திருமணம் கூட நடக்க போகிறது என்ற செய்திகள் கூட பரவியது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மேனன் திருமணம் குறித்தும் லிவிங் டுகெதர் குறித்தும் மனம் திறந்துள்ளார்.

அப்போது பேசிய அவர், எனக்கு திருமண உறவில் நம்பிக்கையில்லை. கல்யாணம் செய்துகொண்டால் தான் அன்பு, காதல் கிடைக்கும் என்று இல்லை. நான் திருமணமும் செய்துகொள்ள மாட்டேன். துணை’ என்னும் வார்த்தைக்கு வலு சேர்க்க நிறைய நம்பிக்கை, அன்பு, காதல் கொண்ட நபர் வேண்டும். அதைக் கல்யாணம் என்ற வார்த்தையில் சுருக்க விரும்பவில்லை. அதை, ‘லிவிங் டு கெதர்’னு கூட சொல்லமுடியாது’ என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement