3 ஆண்டுகளாக சினிமாவில் தலை காண்பிக்காமல் இருந்த லட்சுமி மேனனா இது. லேட்டஸ்ட் வீடியோ இதோ.

0
39060
- Advertisement -

தமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. நயன்தாரா, அசின் துவங்கி தற்போது என்ட்ரி கொடுத்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் வரை பல்வேறு மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். அப்படி வந்தவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் மூலம் தென்னிந்திய திரையுலகில் இளம் புயலாக வந்த நடிகை லட்சுமி மேனன். தமிழில்  கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனவர் லட்சுமி மேனன்.

-விளம்பரம்-

கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைத்தது. கும்கி படத்திற்கு பின்னர் சசிகுமாருடன் ‘சுந்தர பாண்டியன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். மேலும், இவருக்கும் முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த லட்சுமி மேனன் கொஞ்சம் மாடர்னாக கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அது அவருக்கு செட் ஆகாததால் படவாய்ப்புகளும் இவருக்குகுறையத் துவங்கின. மேலும், அஜித்தின் தங்கையாக வேதாளம் படத்திலும் நடித்திருந்தார் கடைசியாக விஜய் சேதுபதியின் ‘ரெக்க’ படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் எந்த படத்திலும் அவரை காணமுடியவில்லை.

இந்த நிலையில் நடிகை லட்சுமி மேனன் நீண்ட வருடங்களுக்கு பின்னர் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். சமீபத்தில் நடிகை லட்சுமி மேனின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரிவு வருகிறது. நடிகை லட்சுமி மேனனை நீண்ட வருடங்கள் கழித்து பார்க்கும் ரசிகர்கள் பல விதமாக கமன்ட் செய்து வருகின்றனர. மேலும், விரைவில் படங்களில் நடியுங்கள் என்று அன்புக் கோரிக்கைகளையும் வைத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

Advertisement