கும்கி அஸ்வின் தந்தையும் தயாரிப்பாளருமான ஸ்வாமிநாதன் கொரோனா பாதிப்பால் மரணம்.

0
2885
swaminathan
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஸ்வாமிநாதன் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளரான ஸ்வாமிநாதன் பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ்ஸின் உரிமையாளர் ஆவார். இவரது தயாரிப்பில் பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை போன்ற படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருந்தது.

- Advertisement -

மேலும், தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் இவர் பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக பகவதி படத்தில் வடிவேலுவுடன் இவர் வரும் காட்சி மிகப்பிரபலம். இந்த நிலையில் ஸ்வாமிநாதன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 62.

தயாரிப்பாளர் சுவாமிநாதனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அஸ்வின் லட்சுமி மூவி மேக்கர் தயாரித்து இருந்த பாஸ் என்கிற பாஸ்கிரன் படத்தில் நடிகராக அறிமுகமானார். மேலும், கும்கி படத்தில் கூட காமெடியனாக நடித்திருந்தார். நடிகர் அஸ்வினுக்கு கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி ஒன்றரை மாதத்திலேயே தந்தையை இழந்துள்ளார் அஸ்வின்.

-விளம்பரம்-
Advertisement