என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு நிஜமான சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். சமூக ஆர்வலரான இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை ” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

மேலும், இவர் நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் திரையுலகில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு இவர் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மானி, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.

Advertisement

ஆனால், இவர் இயக்கிய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். சமூக பிரச்சனை குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைக்கும் பதிவு போட்டு வருவார். அவ்வப்போது அவர் போடும் பதிவுகளை சர்ச்சையாகவும் மறுவதுண்டு. அதற்கு அவர் தகுந்த பதிலடியும் கொடுத்துள்ளார்.

பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து, தான் விலகப்போவதாக கடந்த 2018 ஆம் ஆண்டுலட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். தான் மீண்டும் ஒரு படத்தை இயக்கப்போவதாகவும் அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தார். அதற்கேற்றாற் போல இந்த நிகழ்ச்சியின் மீது சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கும் தொடர்ந்ததார்.

Advertisement

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்குபெறுவீர்களா என்ற கேள்விக்கு சமீபத்தில் விடையளித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்கபோகிறேன் என்று வதந்திகள் வருகிறது. இந்த நிகழ்ச்சியை வேறு சில தொலைக்காட்சியில் நடத்த கூட என்னை அணுகினார்கள் ஆனால், அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. இனி கண்டிப்பாக நான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்குபெற மாட்டேன் என்றுகூறி இருந்தார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் பல வருடங்கள் குறித்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான் என்னுடைய ஏரியரில் சிறப்பான மற்றும் மோசமான ஒரு விஷயம் நான் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று ஜாக்கிரதியாக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் ஆனால் சில கண்மூடித்தனமான நம்பிக்கையால் அந்த நிகழ்ச்சியை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஆகிவிட்டது’ என்று கூறியுள்ளார்.

Advertisement