சமீபத்தில் வெளிவந்த நயன்தாரா நடித்த அறம் திரைப்படம், சமூக அக்கரை கொண்ட இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படம் மக்களிடம் மட்டுமல்லாது திரைப்பிரபலங்கள் அரசு அதிகாரிகள் என பலரையும் கவர்ந்தது. பலரும் பாராட்டி வரும் இந்த படத்தை, இயக்குனர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமக்கிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நயன்தாராவின் நடிப்பு திறமையையும் பாராட்டியும், படத்தில் வரும் ஒரு காட்சிக்கு ஆட்சேபனையும் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

Advertisement

அறம் படம் ஒரு அற்புதமான சமூக விழிப்புணர்வுப்படம். நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிட்டு அவரை ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிடாதீர்கள்.
அவருடைய அபார நடிப்புத் திறமையை நாங்கள் இன்னும் பார்க்க வேண்டும், இது போன்ற படங்களை அவர் இன்னும் கொடுப்பதை தடுத்துவிடாதீர்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், படத்தில் நயன்தாரவின் காலில் விழுவார்கள், அப்படி யாரும் விழக்கூடாது. தமிழகத்தில் அந்த பழக்கம் பலருக்கு உள்ளது அதனை மாற்ற வேண்டும். பெற்றோர் காலில் விழுவதை தவிற வேறு யார் காலிலும் விழுகூடாது என பதிவிட்டிருந்தார்,

Advertisement
Advertisement