இது ஓவரா இல்ல – நவரசா நடிகருக்கு ஆஸ்கர் கொடுக்க சொன்ன லட்சுமி ராம்கி. ரசிகர்களின் கமெண்ட்ஸ்.

0
4063
- Advertisement -

மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஆந்தாலஜி வகை வெப் சீரிஸ் ‘நவரசா’. 9 கதைகள் கொண்ட இந்த சீரிஸ்ஸில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், பார்வதி, ரேவதி, ரோகிணி எனப் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என்னும் ஒன்பது அபிநயங்களை கருப்பொருளாகக் கொண்டு இந்த ஆந்தலாஜி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அருவருப்பு என்ற ரசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள பகுதி பாயாசம்.

-விளம்பரம்-

77 வயதுப் பெரியவர். தன் அண்ணன் மகன் சுப்பராயன் என்றாலே அவருக்குப் பிடிக்காது. ஊரிலேயே நடக்கும் சுப்பராயனின் மகள் திருமணத்துக்குச் செல்லாமல் காலம் கடத்துகிறார். பிறகு அவராகவே செல்கிறார். அங்கு நடக்கும் நிகழ்வுகளில் அவரது மனம் லயிக்கவில்லை. தொடர்ந்து ஏதேனும் ஒரு குறையைச் சொல்லி முனகியபடியே இருக்கிறார். மரியாதை, புகழ், பெருமை என அனைத்தும் சுப்பராயனுக்குக் கிடைப்பதை அவர் விரும்பவில்லை.

இதையும் பாருங்க : முதல் முறையாக தன் கணவருடன் pregnancy போட்டோ ஷூட் நடத்திய பரீனா-வீடியோ இதோ.

- Advertisement -

இந்நிலையில் மெல்ல அவர் அந்த இடத்தை விட்டு நகர்கிறார். திருமணத்தில் என்ன நடந்தது, அவர் தன் இயலாமையை எப்படித் தீர்த்துக் கொள்கிறார், அவர் அப்படி இருப்பதற்கான காரணம் என்ன என்பதே இந்த ‘பாயாசம்’ கதை. இதில் அருவி புகழ் அதிதி பாலன், ரோகினி, டெல்லி கணேஷ் என்று பலர் நடித்துள்ள இந்த கதையை வசந்த் இயக்கி இருக்கிறார்.

நவரசாவில் வந்த கதைகளிலேயே, இந்த பாயாசம் கதையும் ஓரளவிற்கு ரசிக்கும்படி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த கதையில் நடித்த டெல்லி கணேசுக்கு ஆஸ்கார் கொடுக்க வேண்டும் என்று பிரபல இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராம கிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர், பாயாசம் நல்ல கதை தான் ஆனால், ஆஸ்கர் எல்லாம் ரொம்ப ஓவர் என்று பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement