‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.இந்த படத்தில் தனுஷ்ஷை தவிற இந்த படத்தில் நடித்த லால், நட்டி நடராஜன், யோகி பாபு என்று அனைவரும் தனுஷுக்கு இனியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

அதிலும், இந்த படத்தில் தனுஷுக்கு பின்னர் பலராலும் பாராட்டப்பட்டது ‘எமராஜா’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் லாலின் நடிப்பு தான். மலையாள நடிகரான இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் சண்டக்கோழி, ஓரம் போ, காளை, குட்டி புலி, சீமராஜா என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : பாணி பூரி Prank செய்த பெண் – சவ்வு கிழியும்படி அரைவிட்ட இளைஞர். இனி Prank-கே பண்ண மாட்டேன் என்று கதறிய பெண்.

Advertisement

சமீபத்தில் இவர், கர்ணன் படத்தில் தான் ஏன் சொந்தக் குரலில் பேசவில்லை என்ற விளக்கத்தை அளித்திருந்தார். அதில், ‘கர்ணன்’ படத்தில் ஏமராஜா பாத்திரத்துக்கு ஏன் சொந்தக் குரலைப் பயன்படுத்தவில்லை என்று பலரும் என்னிடம் கேட்டு வருகிறீர்கள். ‘கர்ணன்’ படம் திருநெல்வேலி பின்னணியைக் கொண்ட திரைப்படம் என்பதை நீங்கள் அறிவீர்கள். திருநெல்வேலியின் தமிழ் என்பது சென்னையில் பேசப்படும் தமிழ் மொழியைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானது.  ‘கர்ணன்’ மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியவத்துவம் உள்ள ஒரு திரைப்படம்.

மேலும் தனித்துவமான அந்த வட்டார மொழியைப் பேசுவதன் மூலமே அந்தக் கதாபாத்திரம் முழுமை பெறும். அதில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் உள்ளூர்க்காரர்கள். எனவே என்னுடைய மொழி மட்டும் படத்தில் தனியாகத் தெரிவதற்கு வாய்ப்பு இருந்தது. படத்தில் என்னுடைய பங்களிப்பு 100% இருக்கவேண்டும் என்று நான் விரும்பியதால் படத்தின் நலனுக்காக என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரது குரல் பயன்படுத்தப்பட்டது என்று கூறி இருந்தார்.

Advertisement

அந்த நபர் வேறு யாரும் இல்லை, ஹாலிவுட் கதாபாத்திரங்கள் முதல் டோலிவுட் கதாபாத்திரம் வரை டப்பிங் கலைஞராக பணியாற்றிய கதிர் தான். இவர் தமிழில் பல்வேறு படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார். அதே போல ஹாலிவுட்டில் இருந்து தமிழில் டப் செய்யப்படும் பல படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றி இருக்கிறார். Thor குரல் கூட இவரின் குரல் தான். அது போக இவர் மாஸ்டர் படத்தில் கூட நடித்து இருப்பார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

Advertisement
Advertisement