பாணி பூரி Prank செய்த பெண் – சவ்வு கிழியும்படி அரைவிட்ட இளைஞர். இனி Prank-கே பண்ண மாட்டேன் என்று கதறிய பெண்.

0
85910
prank
- Advertisement -

சமீப காலமாகமே சமூக வலைத்தளத்தில் பல்வேறு இளைஞ்சர்கள் சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குட்டி வடிவேலு என்ற சிறுவனின் லவ் வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்ப பின் அந்த வீடியோவில் வந்த சிறுமி குழந்தைகள் நல காப்பகதிற்கு வரை சென்ற சம்பவமும் அரங்கேறியது. இப்படி யூடுயூபில் லைக்ஸ்களுக்காக பலர் பல விதான சேட்டைகளை செய்து வருகின்றனர். அதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் prank வீடியோ.

-விளம்பரம்-

கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் தரப்பில், prank show என்று சொல்லக்கூடிய குறும்புத்தனமான வீடியோ எடுப்பதற்கான செயல்களால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக முறையிடப்பட்டது. ஒரு சிலர் இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது.இதனால் அதற்கும் தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞ்சர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் பாருங்க : ‘என்னையும் கைது பண்ணுங்க’ – மீண்டும் மோடி அரசை சீண்டிய ஓவியா. இப்போ என்ன பிரச்சனை தெரியுமா ?

- Advertisement -

இதையடுத்து நீதிபதிகள் prank show எனப்படும் குறும்பு வீடியோக்களுக்கும், அதனை தொலைக்காட்சிகள் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டனர் தீர்ப்பளித்தனர். ஆனாலும், தொடர்ந்து பல்வேறு யூடுயூப் சேனல்கள் prank செய்து தான் வருகின்றனர். இதில் ஒரு சிலர் தங்கள் டீமை வைத்தே திட்டமிட்டு prank செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பானி பூரி திருடி தின்னும் prank செய்து செவிலில் அடி வாங்கியுள்ளார் ஒரு இளம் பெண்மணி.

யூடுயூபில் Just For Siruppu என்ற சேனலில் பிரியா என்ற பெண் ஒருவர் prank செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் பானி பூரி சாப்பிட்டு கொண்டு இருப்பவர்களிடம் திருடி சாப்பிடுவது போல Prank செய்தார். இந்த prank-ன் போது இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்து வெளுத்து வாங்கினார். இதனால் இனிமேல் நான் prank செய்ய மாட்டேன் என்று அந்த பெண்மணி அழுது புலம்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement