தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்தவர் அசோகன். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சியில் தான். இவருடைய உண்மையான பெயர் ஆண்டனி. பின் திரை உலகத்திற்கு அசோகன் என்று மாற்றிக் கொண்டார். மேடை நாடகத்தின் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதோடு இவருக்கு சிறுவயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடிப்பது, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று பல போட்டிகளில் பங்கேற்று வந்தார். பின்னர் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு சினிமாவிற்குள் நுழைந்தார்.

இவர் முதன் முதலில் அவ்வையார் என்ற தமிழ் திரைப்படத்தின் முலம் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். இவருடைய வில்லன் கதாபாத்திரங்களை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த அளவிற்கு மிரட்டியிருப்பார்.

Advertisement

நடிகர் அசோகனின் திரைப்பயணம்:

மேலும், இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரங்கள் மட்டுமில்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார். 1960 முதல் 70 காலகட்டங்களில் மட்டும் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரின் மனைவி பெயர் சரஸ்வதி. திருமணத்திற்கு பெயர் மேரி ஞானம் என பெயர் மாறினார். சரஸ்வதியின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், எம்.ஜி.ஆர், ஏ.சி.திருலோகசந்தர், ஏவிஎம் சரவணன் ஆகியோர் உதவியோடு சரஸ்வதியை திருமணம் செய்து கொண்டார் அசோகன்.

நடிகர் அசோகனின் மகன்:

நடிகர் அசோகன் இறந்த இரண்டு வருடங்களில் இவரும் காலமானார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூத்தவர் அமல்ராஜ் .அசோகன் கையில் உள்ள குழந்தை. தற்போது உயிருடன் இல்லை. அதில் ஒருவர் வின்சென்ட் அசோகன். நடிகர் வின்சென்ட் அசோகனும் தன் அப்பாவை போல தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார். நடிகர் சரத்குமார் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த ஏய் என்ற திரைப்படத்தின் மூலம் தான் வின்சென்ட் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் போக்கிரி, ஆல்வார், யோகி, வேலாயுதம், தலைவன், வடசென்னை போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

Advertisement

வின்சென்ட் அசோகனின் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் வின்சென்ட் அசோகன் அவர்கள் ஒரு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன் தந்தை குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அப்பா என்னை சினிமாவில் இருந்து தள்ளி வைத்திருந்தார்.

Advertisement

வின்சென்ட் அசோகன் அளித்த பேட்டி:

ஏனென்றால், நான் நன்றாக படிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். நான் நடிக்க வேண்டும் என சொன்னாலும் அவர் படித்துவிட்டு சினிமாவில் நடிக்கலாம் என்று கூறினார். பின் நான் 12 வது படிக்கும் போதே அவர் இறந்து விட்டார். அதற்கு பிறகு நான் என் பட்டப்படிப்பை முடித்தேன். அப்பாவுடைய ஆசைப்படி படிப்பு முடித்துவிட்டு தான் சினிமாவிற்குள் நுழைந்தேன் என்று கூறுகிறார். இப்படி வின்சென்ட் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement