தென்னிந்திய திரைப்பட நடிகர் கலாபவன் மணி இறப்பு குறித்து சிபிஐ விசாரணை தாக்கல் முடிவுகள் வந்து உள்ளது. நடிகர் கலாபவன் மணி அவர்கள் கடுமையான கல்லீரல் நோய் பாதிப்பால் தான் இறந்து உள்ளதாக சிபிஐ விசாரணை தெரிவித்து உள்ளது. இந்திய திரைப்பட நடிகர், பாடகர் கலாபவன் மணி. இவர் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் மலையாள திரைப்படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். கலாபவன் மணி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி திரைப் படங்களில் அதிகமாக குணச்சித்திர மற்றும் வில்லனாக நடித்து உள்ளார். தமிழில் விக்ரம்மின் ஜெமினி, ஜெயம் ரவியின் மலை, விஜய்யின் புதிய கீதை உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர். அதுமட்டும் இல்லாமல் கலாபவன் மணி அவர்கள் நாட்டு புறப்பாடல்களை கூட பாடி உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள பண்ணை வீட்டில் நடிகர் கலாபவன் மணி அவர்கள் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.

Advertisement

கலாபவன் மணி குடும்பத்தினர் அவரை உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கலாபவன் மணி இறந்து போனார். இறக்கும்போது இவருக்கு 45 வயது தான் ஆனது. இதையடுத்து அவருடைய இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. பின்னர் கலாபவன் மணி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனைக்கு பின் அவர் உடலில் மெத்தில் மற்றும் எத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் இவருடைய மரணம் குறித்து பல குழப்பங்கள் ஏற்பட்டது. அதோடு கலாபவன் மணி அவர்கள் குடிப்பழக்கம் கொண்டவர். அதனால் அவரது மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருப்பார்களோ?? என்று கலாபவன் மணி குடும்பத்தினர் சந்தேகப்பட்டு வழக்கு தொடுத்தனர். இவருடைய இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்க கோரி கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர் கேரள உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

Advertisement

இதன்படி கடந்த இரண்டு வருட விசாரணைக்கு பின் கொச்சி நீதிமன்றத்தில் கலாபவன் மரணம் குறித்து முடிவு சொல்லப்பட்டது. அதில் அவர்கள் கூறியது, உண்மையிலேயே கலாபவன் மணி அவர்கள் கல்லீரல் பாதிப்பால் தான் மரணமடைந்தார் என்று தெளிவாக பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது. இப்படி ஒரு நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பின்னர் கலாபவன் அளித்த முதல் பேட்டி ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement