கடந்த இரண்டு நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமே பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 14 ஆம் தேதி புல்வாமா நடத்திய தாக்குதலுக்கு தற்போது இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஸ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் இரண்டு தமிழக வீரர்களும் அடக்கம். 

Advertisement

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பால்கோட் என்ற பகுதியில் இந்திய போர் விமானங்கள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாமில் நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 300 தீவிர வாதிகள் கொள்ளப்பட்டதாக விமானப்படை தெரிவித்தது.

இந்த தாக்குதலை அடுத்து எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. இந்த நிலையில் இந்திய எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தானின் f16 ரக விமானம் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. ஆனால், அந்த விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்ந்தப்பட்டுள்ளது. அதே போல அந்த விமானத்தில் இருந்த தீவிரவாதி பாரஷுட்டில் குதித்து தப்பித்துவிட்டார் என்று குறைப்படுகிறது. இதனால் பாதுகாப்பு காரணமாக காஸ்மீரில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement