நடிகர் விஜயை வைத்து இதுவரை துப்பாக்கி, கத்தி, சர்கார் என்று மூன்று படங்களை இயக்கிவிட்டார் முருகதாஸ். இந்த மூன்று படங்களுமே மாபெரும் ஹிட் அடைந்தது.அதிலும் துப்பாக்கி திரைப்படம் விஜய்யின் திரை வாழக்கையில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்திருந்த்து.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இதுவரை தமிழில் இயக்கிய அணைத்து படங்களும் மாபெரும் ஹிட் அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவர் இயக்கிய சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போதும் சில திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.தற்போது ரஜினியை வைத்து படம் இயக்க ஏ ஆர் முருகதாஸ் திட்டம் தீட்டி வருகிறார்.
இதையும் படியுங்க : அஜித் வாங்கும் அதே சம்பளமா.! அடம்பிடிக்கும் ரஜினி.! குழப்பத்தில் முருகதாஸ் .!
முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கிய கத்தி படமும் சரி துப்பாக்கி படமும் சரி, இரண்டாவது பாகம் இருக்கும் என்ற எதிர்பார்புடனேயே முடித்திருந்தார் முருகதாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாசும் துப்பாக்கி படத்தை தான் இரண்டாவது பாகம் எடுக்க ஆசை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முருகதாஸ் விஜய் மகன் சஞ்சய்யை வைத்து ‘துப்பாக்கி 2’ இயக்க திட்டமிட்டுள்ளார் என்று கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டும் உண்மை என்றால் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாடட்டமாக தான் இருக்கும். ஆனால் , இந்த தகவல் வதந்தி என்று தான் கூறபடுகிறது.