விஜய் 63 யில் முதல் பாடலை பாடப்போவது இவர் தான்.! மீண்டும் சுதப்பும் ஏ ஆர் ரஹ்மான்.!

0
980
A-r-rahman-vijay-63
- Advertisement -

இளைய தளபதி விஜய் ‘சர்கார்’ படத்தை தொடர்ந்து தற்போது தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் இயக்குனர் அட்லீ. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடிகர் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் ‘மைக்கேல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தின் படபிடிப்பில் முதலில் பாடல் காட்சியை தான் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க : இந்தியாவில் இதான் முதன்முறை.! விஜய் 63 பற்றிய ரகசியத்தை சொன்ன இசைப்புயல்.!

- Advertisement -

மேலும் உதயா,அழகிய தமிழ் மகன், மெர்சல்,சர்கார் போன்ற படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். இந்நிலையில் இந்த படத்தின் விஜய்யின் முதல் இன்ட்ரோ பாடலை பிரபல பின்னணி பாடகர் ‘பம்பா பாக்யா’ பாட இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தில் முதல் பாடலான ‘சிம்டாங்காரன்’ பாடலை பாடி இருந்தார். ஆனால், அந்த பாடல் எதிர்ப்பத அளவிற்கு வெற்றியடையவில்லை. இந்நிலையில் இந்த பாடலும் என்ன கதி ஆகுமோ என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement