ஸ்ரீதேவிக்காக 37 வருட பழக்கத்தை விட்ட ரஜினி மனைவி லதா ரஜினிகாந்த் ?

0
1764

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் இறப்பு இந்தியாவில் பலரையம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை தளன்று துபாயில் இறந்த அவரது உடல் பல்வேறுபட்ட செயல்முறைகள் மற்றும் விசாரணைகளுக்கு பிறகு இன்று அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பை வந்து சேர்ந்தது.

actress sridevi

- Advertisement -

இன்று மாலை வரை அவரது உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்படுகிறது. மாலைக்குப் பின் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் பலர் வருகின்றனர்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். மேலும், ரஜினிகாந்திற்கும் அவரது மனைவி லதாவிற்கும் இன்று 37வது திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latha-Rajinikanth

வருடா வருடம் தங்களது திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த தம்பதியினர் இந்த 37வது வருட திருமண விழாவை கொண்டாட வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். ஏனெனில் இருவருக்கும் நெருக்கமான தோழி ஸ்ரீதேவியின் இறப்பு அவர்களை வாட்டியுள்ளது. மேலும், ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள உள்ளதாலும் 37 வருட தொடர் நிகழ்வினை ரத்து செய்துள்ளனர்.