பாவம் கணேசன் மூலம் மீண்டும் ரீ – என்ட்ரி கொடுக்கும் லதா ராவ் – அந்த நடிகை விலகியதற்கு இதான் காரணமா ?

0
366
Latha
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பல்வேறு திருப்பங்களுடன் சென்றிருக்கும் தொடர் தான் பாவம் கணேசன். கடந்த ஆண்டு தான் இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. kpy புகழ் நவீன் இந்த தொடரில் நாயகனாக நடிக்கிறார். பின் இந்த தொடரில் நேகா கவுடா, அனில ஸ்ரீகுமார், ஷிமோனா ஜேம்ஸ், ஆனந்த் பாண்டி, ஷயமா ரெய்லடீன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

-விளம்பரம்-
2

இந்நிலையில் இந்த தொடரில் நடிகை ஒருவர் விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது வேற யாரும் இல்லைங்க, நாயகனின் அக்கா தான். இந்த தொடரில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நாயகனின் அக்காவாக நடித்து வந்தவர் நடிகை ஹாசினி என்கிற விலாஷினி. இவர் இசைமைப்பாளர் இளையராஜாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். மேலும், இவருக்கு பதிலாக தற்போது இந்த சீரியலில் சித்ராவாக நடித்து வருபவர் நடிகை லதா ராவ். இவர் சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர்.

- Advertisement -

பாவம் கணேசன் சீரியலில் விலகிய நடிகை:

அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் பல படங்களிலும் நடித்திருக்கிறார். ராஜ்கமல்- லதா ராவ் என்றால் தான் பலருக்கும் நினைவிருக்கும். கணவன்-மனைவி இருவருமே சின்னத்திரையில் பிரபலமானவர்கள். ஆனால், சில வருடங்களாகவே லதா தமிழ் சீரியல் இருந்து பிரேக் எடுத்திருந்தார். தற்போது இவர் பாவம் கணேசன் சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த தொடரின் நாயகன் நவீனம், லதாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நவீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லதா புதிய சித்ராவாக நடிக்கிறார் என்ற தகவலை கூறி இருக்கிறார்.

கம்பேக் கொடுக்கும் லதா ராவ்:

இதனைத் தொடர்ந்து லதாவின் கம்பேக்கிற்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் சித்ராவாக நடித்துக்கொண்டிருந்த ஹாசினி சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து என்ற புதிய தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பாவம் கணேசன் சீரியலில் விலகியதற்கு இது தான் காரணமாக இருக்குமோ? என்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து போட்டு வருகின்றனர். ஆனால், ஹாசினி பாவம் கணேசன் சீரியல் இருந்து விலகியதற்கான காரணத்தை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

லதா ராவ் அளித்த பேட்டி:

இந்நிலையில் சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் லதா ராவ் இடம் பேட்டி எடுக்கப்பட்ட போது அதில் அவர் கூறி இருப்பது, பத்து வருடம் கழித்து நடிக்கிறேன். அதுவே ரொம்ப எக்ஸைட்டிங் ஆக இருக்கிறது. பலரும் எப்ப நடிப்பேன் என்று என்னிடம் கேட்டிருந்தார்கள்? இப்பதான் அதற்காக சூழல் அமைந்தது. நான் நடிக்கலாம் என்று முடிவு எடுத்த போது தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதுவரை நான் அதிகம் நெகட்டிவ் ரோலில் தான் நடித்திருக்கிறேன். அந்த ரோல் என்னை விட்டுப் போகாது போல இப்பவும் நெகடிவ் ரோலில் நடிக்கிறேன். இது தான் நம் திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதால் நானும் ஓகே சொல்லிவிட்டேன். நமக்கு கார் ஓட்ட தெரியும்.

ரீ- என்ட்ரி குறித்து லதா ராவ் கூறியது:

கொஞ்சம் வருஷமாக கார் ஓட்டாமல் மறுபடி காரை எடுத்தால் நமக்கு ஓட்டத் தெரியாதா என்ன?
அது மாதிரிதான் நடிக்கிறதும். நமக்கு நடிப்பது புதுசு இல்லை. ஆனால், இங்க நிறைய மாற்றங்கள் நடந்து இருக்கிறது. இந்த டீமில் இருக்கிற பலர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால் ஈசியாக ஒர்க் பண்ணிட்டு இருக்கிறேன். பரீட்சை எழுதிட்டு ரிசல்ட்டுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கிற மாதிரி இந்த கேரக்டர் ரீச் ஆகும் என்ற நம்பிக்கை நிச்சயம் இருக்கிறது. தொடர்ந்து சீரியல்களில் இனி என்னைப் பார்க்கலாம் என்று உற்சாகத்துடன் கூறியிருக்கிறார்.

Advertisement