எம் எம் ஜி ஆரை தடவினார் என்று மோசமாக பேசிய கஸ்தூரி.! லதாவின் பதிலடி.!

0
830
Kashuri-latha
- Advertisement -

தமிழ் சினிமாவின் 90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. தமிழ்நாட்டில் சமூக வலைத்தளம் மூலம் சர்ச்சையை ஏற்படுத்துபவர்களில் நடிகை கஸ்தூரிக்கும் ஒரு இடம் உண்டு. சமீபகாலங்களில் அவர் அடிக்கடி இப்படி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகிவிட்டது.

-விளம்பரம்-

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னையில் ,சென்னை – கோல்கட்டா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பிரிமீயர் கிரிக்கெட் போட்டி பற்றி கஸ்தூரி, “என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு, லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க,” என டுவீட் போட்டிருந்தார்.

அதற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார் கஸ்தூரி. இந்த நிலையில் கஸ்தூரி பேச்சை கண்டித்து நடிகை லதா வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

- Advertisement -

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டா, அவங்க நடித்த படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே. து அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி. அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement