சொன்னதை செய்த லாரன்ஸ்..!முதல் வீடு யாருக்கு என்று தெரிந்தால் மேலும் பாராட்டுவார்கள்..!

0
325
Lawrance

கஜா புயல், கடந்த 15-ம் தேதி நள்ளிரவு அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. எட்டு மாவட்டங்களில் கடும் சேதத்தை இந்தப் புயல் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. கஜா புயல் கரையைக் கடந்து பல நாள்களாகியும், அதிலிருந்து அந்த மக்களால் மீண்டு வர முடியவில்லை.

Lawrance

தொண்டு நிறுவனங்கள், தனி மனிதர்கள், அரசாங்கத்தின் உதவிகள் தொடர்ந்து அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 வீடுகள் கட்டித்தர முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் புயலால் தாங்கி இருந்த குடிசையை இழந்த பாட்டி ஒருவரிடம் உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று சிலர் கேட்டிருந்த போது அந்த பாட்டி, தங்குவதற்கு குடிசை இருந்தால் போதும் என்று தெரிவித்திருந்தார்.

சமூக வளைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வர அந்த விடியோவை பார்த்த லாரன்ஸ் அந்த பாட்டியை தேடி சென்று முதல் வீட்டினை கட்ட இன்று பூஜைகளை துவங்கியுள்ளார். லாரன்ஸின் இந்த செயலை பார்த்து தற்போது அனைவரும் வியந்து அவரை பாராட்டி வருகின்றனர்.