நிலத்தை எல்லாம் பார்த்த நிலையில் , பார்வதிக்கு வீடு கட்டி தரும் முடிவை மாற்றிய லாரன்ஸ் – அவரே வெளியிட்ட காரணம்.

0
1122
lawrance
- Advertisement -

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் வெளியான பின்னர் உண்மையான செங்கேணி , ராஜாகண்ணுவின் மனைவி பார்வதியை பலர் நேரில் சந்தித்து பேட்டி எடுத்து வந்தனர். அந்த வகையில் பிரபல யூடுயூபர்களான வலைபேச்சு குழு பார்வதியை நேரில் சந்தித்து பேட்டி எடுத்ததோடு அவர்களுக்கு ஒரு தங்க சங்கிலியையும் பரிசளித்தனர். மேலும், இந்த வீடியோவை பார்த்து அவரின் உண்மையான வறுமை நிலையை கண்டு நடிகர் லாரன்ஸ், தன் சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக கூறி இருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-80-1024x526.jpg

லாரன்ஸ் கொடுத்த வாக்குறுதி :

மேலும், பார்வதியை அவரது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்த லாரன்ஸ், அவருக்கு வீடு கட்டி தருவதாக அவரிடம் வாக்கு கொடுத்தார். பார்வதியை நேரில் சந்திக்க சென்ற போது எதுவும் வாங்கி வாரவில்லை என்று வருத்தப்பட்ட லாரன்ஸ் உடனே தன் செக் புக்கை எடுத்து 1 லட்ச ரூபாய் செக் போட்டு கொடுத்தார். இப்படி ஒரு நிலையில் பார்வதிக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை மாற்றி இருகிறார் லாரன்ஸ். இதுகுறித்து லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

முடிவை மாற்றிய லாரன்ஸ் :

’ஜெய்பீம்’ படத்தின்‌ உண்மைக்கதைநாயகனான ராசாக்கண்ணுவின்‌ மனைவி பார்வதி அம்மாள்‌ வறுமை நிலையில்‌ வாழ்ந்து வருவதை அறிந்த பிறகு, பார்வதி அம்மாவுக்கு எனது செலவில்‌ வீடு கட்டிக்‌ கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன்‌. பார்வதி அம்மாவை நேரில்‌ சந்தித்தும்‌ அவரிடம்‌ இதுபற்றி தெரிவித்தேன்‌. அரியலூர்‌ மாவட்டம்‌ விக்கிரமங்கலம்‌ அருகில்‌ உள்ள, கீழ நத்தம்‌ கிராமத்தில்‌ பார்வதி அம்மாளின்‌ மகளுக்கு நிலம்‌ உள்ளது என்றும்‌ அந்த இடத்தில்‌ வீடு கட்டித்தரும்படி கேட்டுக்கொண்டனர்‌.

Jay Beam' is not going to build a house for Real Chengani …. why did he  suddenly change his mind? – Lawrence Description - time.news - Time News

லாரன்ஸ் பொறுப்பை ஏற்ற முதல்வர் :

அதன்படி சில நாட்களுக்குமுன்‌ கீழநத்தம்‌ கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்தோம்‌. விரைவில்‌ வீடுகட்டும்‌ பணியைத்‌ தொடங்கும்‌ முயற்சியில்‌ இருந்தநிலையில்‌, பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில்‌ வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்தி மூலம்‌ அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்‌.

-விளம்பரம்-

பார்வதிக்கு புதிய உதவியை அறிவித்த லாரன்ஸ் :

பார்வதி அம்மாவின்‌ இன்றைய வறுமைநிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தை கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர்‌ மாண்புமிகு மு.க.ஸ்டாலின்‌ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும்‌ பாராட்டுக்களையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நான்‌ ஒதுக்கிய 5 லட்சத்துடன்‌ மேலும்‌ 3 லட்சம்‌ சேர்த்து, பார்வதி அம்மாள்‌, அவருடைய மகள்‌, மற்றும்‌ அவருடைய இரண்டு மகன்கள்‌ ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளேன்‌.

ஜெய் பீம் குழுவுக்கு நன்றி :

பார்வதி அம்மாவுக்கும்‌ அவருடைய குடும்பத்தினருக்கும்‌ நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ’ஜெய்பீம்’ படக்குழுவினருக்கும்‌, ’ஜெய்பீம்’ படத்தை தயாரித்த திரு.சூர்யா, திருமதி.ஜோதிகா, இயக்குநர்‌ திரு. த.செ. ஞானவேல்‌ அனைவரையும்‌ இத்தருணத்தில்‌ நன்றியோடு நினைவுகூர்வோம்‌ என்று குறிப்பிட்டுள்ளார் லாரன்ஸ். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement