பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினியின் 167 வது படமான இந்த படத்திற்கு ‘தர்பார்’ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக நயன்தாரா நடிக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பேட்டை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.
இதையும் படியுங்க : ரஜினி மனைவி லதாவை எம் ஜி ஆருடன் மோசமாக இணைத்து பேசிய கஸ்தூரி.!
இந்த படத்தில் காமெடி நடிகரான யோகி பாபவும் இருக்கிறார் என்பது தான் தற்போது கிடைத்துள்ள கூடுதல் தகவல். அதிலும் சூப்பர் ஸ்டார் மற்றும் யோகி பாபுவின் காட்சிகள் தான் முதலில் படமாக்கபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யோகி பாபு முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யோகி பாபு இதுவரை விஜய், அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். ஆனால், சூப்பர் ஸ்டார் படத்தில் நடிப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டாருடன் யோகி பாபு காமெடி எடுபடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.