கடந்த 20ஆம் தேதியன்று திமுக மாணவரணி, மருத்துவ அணி, இளைஞசர் அணி சார்பில் நீட் தேர்விற்க்கு எதிராகவும் ஆளுநரை கண்டித்தும் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தினர். அதில் பலரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். அதில் அமைச்சர் உதயநிதி ஆளுநரை கண்டித்தும் நீட் தேர்வை கண்டித்தோம் அக்ரோஷகமாக பேசினார். அது அரசியலில் பேசும் பொருளாக மாறியது. அதற்க்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி கூறியது:

“அனைவரும் சொல்கிறார்களே நீட் ரகசியத்தை உதயநிதி கூறுவரா என்று அந்த ரகசியத்தை நான் கூறுகிறேன். மத்தியில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியை அமரவைக்க வேண்டும். அப்படி செய்தால் கண்டிப்பாக தமிழகத்தில் நீட் தேர்வு இருக்காது.திரு ஆர்.என்  ரவி அவர்களுக்கு எவ்வளவு திமிரு எவ்வளவு கொழுப்பு இவர் எதோ திமிரு தனமாக “I will never ever” நான் கேட்கிறேன் யார் நீங்கள்? நீங்கள் ஒரு தபால் காரர் மட்டுமே. மரியாதையை கொடுத்தால் சென்று கொண்டே இருக்கீர்கள்.

Advertisement

அவர் பெயர் ஆர். என். ரவி இல்லை அவர் பெயர் RSS ரவி. நீங்கள் உங்களுடைய ஆளுநர் பதிவியை ராஜினாமா செய்து விட்டு தமிழகத்தில் எந்த ஒரு தொகுயில் நில்லுங்கள் எங்களுடை அடிமட்ட தொண்டனை வைத்து உங்களை தோற்கடிப்போம். உங்களுடைய சித்தாந்தங்களை தமிழக மக்களிடம் சொல்லுங்கள் அவர்கள் உங்களை செருப்பை கழட்டி அடிப்பார்கள்.”

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்:

“இவரு பெரிய உண்மைய சொல்லிட்டாரு,திட்டம் என்ன தெரியுமா ? மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் நாங்கள் வந்து நீட்டை ஒழித்துவிடுவோம். இந்த டயலாக்கை எந்தனை வருஷம் சொல்லிக்கொண்டே இருப்பிர்கள். கிட்ட தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் இப்படி தான் சொல்லிக்கொண்டு இருக்கிர்கள்.இதை மக்கள் நம்ப தயாராக இல்லை. என்ன ஒரு நடிப்பு அவர் கண்ணில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. உங்களுக்கு ஆட்சி நடத்த திறமை இல்லை தகுதி இல்லை. இது ஒரு துப்புகெட்ட ஆட்சி. அது போன்ற ஒரு ஆட்சியை நடத்திவிட்டு கண்ணீர் வடித்தால் அதை தமிழ் நாட்டு மக்கள் நம்புவார்களா?” ஜெயகுமார் கூறியது.

Advertisement

டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்:

“தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகா அர்ஜூனே கார்கே எதாவது அறிவிப்பை அளித்துள்ளாரா? காங்கிரஸ் கட்சி கொடுக்கும் என்று சொல்ல நீங்க யாரு? நீங்க சொன்ன வாக்குறிதி என்ன ஆச்சு? 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு வாங்க இது மாதிரி பொய்களை தமிழ் நாட்டு மக்களிடம் கொண்டு வருவீர்களா? அமைச்சர் உதயநிதி உண்ணாவிரதத்தில் ஆளுநர் அவர்களை மிகவும் தவறாக பேசியுள்ளார்.

Advertisement

அது எந்த விதத்தில் நியாயம்? அவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். மத்திய அரசினுடைய பிரதிநிதி. ஆனால் அவருடைய வயது என்ன இவருடைய வயது என்ன ஆனால் உதயநிதி 40 வயதை கூட தாண்டவில்லை ஆளுநர் அவர்கள் 70வயதை சார்ந்தவர். அவரை தவறான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை அடிப்பேன் சொல்வது எந்த விதத்தில் நியாயம்” என்று பேசினார்.

அண்ணாமலை விமர்சனம்:

“உதயநிதி ஸ்டாலின் அவர்கள் MLA பதவியை துறந்து விட்டு பிர்லிம்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் நான் அரசியலை விட்டு செல்கிறேன். MLA பதவியை துறந்து விட்டு குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதில் முறைகேடு ஏதும் செய்யக் கூடாது. TNPSC உங்களிடம் இருப்பதால் முறைகேடு செய்யக் கூடாது. அவர்களிடத்தில் ஒரு பண்பு இல்லாமல் பொது அறிவு இல்லாமல் அரசு பதிவில் முக்கியமான பொறுப்பில் உள்ள அமைச்சர் உதயநிதி அவர்கள் ஆளுநரை ராஜினாமா செய்துவிட்டு வா போட்டிக்கு போட்டி பார்த்துக்கலாம்.

இது போன்ற செயல்களால் திமுகவின் இடியப்ப சிக்கல் என்பது அவர்களாகவே தினமும் புதுசு புதுசாக பேசி அந்த சிக்கலை இன்னமும் பெருசாகி கொண்டு இருக்கிறார்கள்.இதில் இருந்து திமுக வெளியே வர முடியாது. நீட் தேர்வை வைத்து இனி அரசியல் பேசுவேன் என்று வெளியே வந்தால் அது கேம் முடிஞ்சது” என்றும் அண்ணாமலை உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தார்.      

Advertisement