முதல்வன் அர்ஜுன் போல உடல் முழுதும் சேற்றை பூசிக்கொண்டு மொட்டை மாடியில் அமர்ந்த அண்ணாச்சி பட நடிகை.

0
7047
uurvashi
- Advertisement -

பொதுவாக நடிகர் நடிகைகள் பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளதை நாம் பார்த்துளோம். ஆனால், தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக்கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தான். பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் தனது கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளார்.

-விளம்பரம்-

பிரபல கடையின் குட்டி முதலாளி அருள். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாதா இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை பல கடைகளை வைத்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் நுழைய இருக்கிறார் என்று செய்திகள் பரவி வந்து கொண்டு இருக்கிறது .தனது கடையின் விளம்பரத்திற்காக நடிக துவங்கிய அருள் அண்ணாச்சி பின்னர் தமிழ் சினிமா துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

இதையும் பாருங்க : தெறி ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது தங்கையுடன் விஜய் மகன் – Unseen புகைப்படம் இதோ.

- Advertisement -

அப்போது அவரிடம் எதார்தமாக நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்க அதனை சீரியஸாக எடுத்துக்கொண்டு சினிமாவில் நடித்தால் ஹீரோ தான் என்று களமிறப்பிகியுள்ளார் அருள். இவர் நடிக்க உள்ள படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி தான் இயக்குகின்றனர். இவர் அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 30 கோடி என்று கூறப்படுகிறது. முதல் படமே இத்தனை கோடி பட்ஜெடடா என்று கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் வாயை பிளந்து வருகின்றனர்.

இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்த நிலையில் இந்த படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற “கீத்திகா திவாரி” என்பவர் நடித்து வருகிறார். அதே போல இரண்டாம் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் முதல்வன் அர்ஜுன் ஸ்டைலில் மொட்டை மாடியில் உடல் முழுதும் சேற்றை பொசிக்கொண்டு அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement