சூர்யாவின் வாடி வாசலை வைத்து ப்ரோமஷன் தேடும் லெஜண்ட் – போஸ்டரை கண்டு புலம்பி தள்ளும் சூர்யா ரசிகர்கள்

0
468
legand
- Advertisement -

லெஜெண்ட் சரவணனின் இரண்டாவது சிங்கள் பாடல் வெளியாக இருக்கிறது என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து சூர்யாவின் ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்தும், புலம்பியும் வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை என பல பொருட்கள் உள்ள கடை சரவணா ஸ்டோர்ஸ். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள்.

-விளம்பரம்-
Related image

பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் பேஸ்டு கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து இருக்கிறார் அருள். இந்த விளம்பரத்தில் நடித்த சரவணா அருளை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து இருந்தார்கள். இருந்தாலும் அவர் அசராமல் ஹன்சிகா, தமன்னா என்று பல நடிகைகளுடன் நடனமாடி இருந்தார்.

இதையும் பாருங்க : பசுவுக்கு ஒரு நியாயம் கோழிக்கு ஒரு நியாயமா ? மாட்டிறைச்சி குறித்து கார்த்தி பட நடிகை கிடுக்குப்பிடி கேள்வி.

- Advertisement -

தி லெஜன்ட் படம்:

விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் களம் இறங்கி இருக்கிறார். இவர் நடித்து வரும் படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குனர் ஜேடி- ஜெர்ரி தான் இயக்கி வருகின்றனர். அதோடு இவரின் கடை விளம்பரத்தையும் இவர்கள் தான் இயக்கி இருந்தார்கள். மேலும், இவர்கள் அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் அருள் நாயகனாக நடிக்கும் படத்திற்கு தி லெஜன்ட் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.

தி லெஜன்ட் படத்தின் நடிகர்கள்:

இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்து இருக்கிறது.

-விளம்பரம்-

லெஜெண்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. சமீபத்தில் ஹரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகி இருந்த மோசலோ மோசலு என்ற முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. தற்போது ஏஜென்ட் படத்தில் இரண்டாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் பலரும் புலம்பி வருவதாக சோஷியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.

புலம்பி தள்ளும் ரசிகர்கள்:

அது என்னவென்றால், லெஜெண்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வாடிவாசல். வாடிவாசல் என்ற பெயரில் தான் இந்த பாடல் மே 20ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான போஸ்டர் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் பலரும் என்ன கொடுமை சரவணா இது ! என்று புலம்பி வருகின்றனர். ஏன்னா, சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் வாடிவாசல். இந்த பெயரில் பாடல் வெளியாவதால் தான் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Advertisement