மாட்டுக்கறி தொடர்பாக நடிகை நிகிலா விமல் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் இளம் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை நிகிலா விமல். இவர் மலையாள சினிமாவில் கடந்த 2009ஆம் ஆண்டு தான் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் நிகிலா. மேலும், இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வசந்தமணி இயக்கத்தில் வெளிவந்த வெற்றிவேல் என்னும் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்த படத்தில் நிகிலா நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் கிடாரி,பஞ்சுமிட்டாய், ரங்கா போன்ற பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நிகிலா நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை நிகிலா விமல் மலையாளத்தில் நடித்து வெளிவந்து இருந்த படம் ஜோ அன்ட் ஜோ.
இதையும் பாருங்க : பேரறிவாளன் விடுதலை – ஏற்ற அண்ணாமலை, எதிர்க்கும் காயத்ரி ரகுராம் (ஒரே காட்சியிலேயே இப்படி ஒரு குழப்பமா)
நிகிலா நடித்த ஜோ ஜோ படம்:
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. படத்தின் பட்ஜெட்டை விட இந்த படம் வசூல் செய்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ஜோமோள் என்ற கதாபாத்திரத்தில் நடிகை நிகிலா விமல் நடித்திருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாமல் வீட்டில் அடங்கிக் கிடக்கும் பெண்ணாகவும், தன்னுடைய தம்பியுடன் சதா சண்டை பிடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நிகிலா நடித்திருந்தார்.
நிகிலா அளித்த பேட்டி:
இந்நிலையில் மாட்டுக்கறி குறித்து நிகிலா விமல் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதுஎன்னவென்றால், ஜோ ஜோ படத்தின் விளம்பரத்துக்காக வெளியீட்டுக்கு முன்பு நிகிலா விமல் ஊடகங்களுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது பற்றிய கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு நடிகை நிகிலா விமல் துணிச்சலாக கூறி இருப்பது, பசுவைக் கொல்வது கூடாது என்கிற சிஸ்டம் எப்போதும் நம்மிடையே இருந்தது கிடையாது.
மாட்டுக்கறி குறித்து நிகிலா கூறியது:
மாட்டுக்கறி வெட்டக் கூடாது என்பதெல்லாம் புதிதாக பேசப்படுகிறது. இது ஒரு பிரச்சனையே இல்லை. விலங்குகளை வெட்ட கூடாது என்றால் எந்த விலங்குகளையும் வெட்டக்கூடாது. பசுவுக்கு என்ற தனித்துவம் எதுவும் இல்லை. வெட்டலாம் என்றால் அனைத்து விலங்குகளையும் வெட்டலாம். நாம் பசுவை மட்டும் வெட்டக்கூடாது கோழியை வெட்டலாம் என்றால் அது எந்த வகையில் நியாயம்? கோழி பறவையாக இருந்தாலும் அதுவும் ஒரு உயிரினம் தானே?
வைரலாகும் நிகிலா பேட்டி:
பசுவுக்கு ஒரு நியாயம் கோழிக்கு ஒரு நியாயமா? மேலும், அசைவம் சாப்பிடக்கூடாது என்றால் கோழி, மீன் போன்றவைகளையும் சாப்பிடக்கூடாது. முழுமையாக சைவமாக மாற வேண்டும். நான் அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடுவேன். ஒன்றை மட்டும் சாப்பிட கூடாது என்றால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியிருந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு அளித்து இருந்தனர். ஆனால், ஒருசில தரப்பினர் இவருடைய பேச்சுக்கு விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.