லியோ படத்தில் இடம்பெற்ற கரு கரு கருப்பாயி பாடல் குறித்து பாடகர் உன்னிமேனன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த வாரிசு மற்றும் பீஸ்ட் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், உலக அளவில் லியோ படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே பழைய பாடல்களை ரீமேக்ஸ் செய்து வெளியிடுவது வழக்கம்.
லியோ படம்:
அந்த வகையில் கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் கூட சக்கு சக்கு பாடல் வெளியாகிருந்தது. இது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டிருந்தது. அதேபோல் தற்போது லியோ படத்தில் கரு கரு கருப்பாயி பாடலுக்கு விஜய் டான்ஸ் ஆடி இருக்கிறார். இதை ரசிகர்கள் வைரல் ஆக்கி கொண்டாடி வருகிறார்கள். மேலும், சோசியல் மீடியா முழுவதும் கரு கரு கருப்பாயி பாடல் தான் ட்ரெண்டிங் ஆகப்பட்டு வருகிறது. இந்தப் பாடல் வெளியாகி 20 வருடங்களுக்கு மேலாகி இருக்கிறது. ஏழையின் சிரிப்பில் படத்தில் இந்த பாடலுக்கு பிரபுதேவா, ரோஜா இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருப்பார்கள்.
கரு கரு கருப்பாயி பாடல்:
இந்த பாடல் வெளியான போதே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. இந்த பாடலை பாடகர் உன்னி மேனன் தான் பாடியிருந்தார். இந்த நிலையில் விஜய் தன்னுடைய பாடலுக்கு நடனம் ஆகியது குறித்து சமீபத்தில் பேட்டி உன்னி மேனன் கூறியது, கருகரு கருப்பாயி பாட்டுக்கு விஜய் சார் டான்ஸ் ஆடி இருந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த பாட்டை தேர்ந்தெடுத்து லியோ படத்தில் வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடம் கழித்து இந்த பாடல் இப்போது இவ்வளவு வைரலாகும் என்று நான் எதிர் பார்க்கவில்லை.
உன்னி மேனன் பேட்டி:
நான் தேவசார் படத்தில் நிறைய பாட்டு பாடிருக்கிறேன். அப்படித்தான் ஏழையின் சிரிப்பில் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் 3 பாட்டு பாடி இருக்கிறேன். ஆனால், கரு கரு கருப்பாயி பாடல் தான் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்த பாட்டுக்கு கொஞ்சம் ஜாலியானது. அதனால் பாடும் போதே நானும் அனுராதா ஸ்ரீராமும் ரொம்ப ஃபன் பண்ணிக் கொண்டுதான் பாடினோம். பிரபுதேவா, ரோஜா நன்றாக நடனம் ஆடி இருந்தார்கள். அப்பவே பாட்டு ஹிட் தான். ஆனால், அப்போ சோசியல் மீடியா எல்லாம் கிடையாது. இப்போ இருக்கிறது. அதனால் இந்த பாடல் வைரலாக இருப்பது நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது.
லியோ குறித்து சொன்னது:
மேலும், லியோ படத்தில் அந்த பாட்டை பார்த்துவிட்டு உலகம் முழுக்க எல்லா இடத்திலிருந்தும் மெசேஜ் செய்கிறார்கள். அதுவும் இந்த பாட்டுக்கு நாங்கள் அடிக்ட் ஆகி விட்டோம் என்று வரும் மெசேஜை பார்க்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்போது நான் கனடாவில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அங்கு இருப்பதால் லியோ படம் பார்க்க முடியவில்லை. இந்தியா வந்ததுமே லியோ படம் தான் பார்ப்பேன். விஜய் சாருக்கு ஷாஜகான் படத்தில் நான் மின்னலை பிடித்து மின்னலை பிடித்து என்ற பாடலை பாடியிருந்தேன். இப்போது கருகரு கருப்பாயி மூலமாக இரண்டாவது பாடலை பாடின மாதிரி இருக்கிறது என்று எமோஷனலாக இருக்கிறார்.