1000 கோடி வசூல்? தயாரிப்பாளரின் பரிசை மறுத்த விஜய் – பல சுவாரசிய தகவலை சொன்ன லியோ பட தயாரிப்பாளர்

0
377
- Advertisement -

லியோ படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் லலித்குமார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த படம் வாரிசு.

-விளம்பரம்-

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

- Advertisement -

லியோ படம்:

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த லியோ படம் பிரம்மாண்டமாக இரண்டு நாட்களுக்கு முன் தான் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகி இருக்கிறது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 4 மணி மற்றும் 5 மணிக்கு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

அது மட்டும் இல்லாமல் படத்தில் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் இரண்டாம் பாதியெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், விஜய்யின் லியோ படம் உலக அளவில் முதல் நாள் 130 கோடி வசூல் செய்து இருக்கிறது. தமிழகத்தில் முதல் நாள் 73 கோடி வசூல் செய்திருக்கிறது. இத்தனைக்கும் ஸ்பெஷல் சோ எதுவும் இல்லாமலே லியோ படம் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

லியோ வசூல்:

முதல் நாளில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் 15 கோடி, கர்நாடகா 14 கோடி, கேரளா 11 கோடி. கேரளாவில் இதுவரை எந்த படமும் முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்ததில்லை என்றும் முதல் முறை லியோ படம் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் லியோ படம் இரண்டே நாளில் பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கிறது. இரண்டே நாளில் விஜயின் லியோ படம் 210 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இனி வரும் நாட்களிலும் லியோ படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி :

இந்த நிலையில் லியோ படம் தொடர்பாக தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், லியோ படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ரஜினிகாந்த் லியோ படத்தை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டி இருந்தார். லோகேஷ் கலகராஜ் அடுத்ததாக தலைவருடைய 171 வது படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்திலும் நான் தான் தயாரிப்பாளராக இருந்தேன். மாஸ்டர் படம் வெற்றி அடைந்தபோது விஜய் இடம் உங்களுக்கு ஏதேனும் பரிசு கொடுக்க நினைக்கிறேன் என்று கேட்டேன். அதற்கு விஜய், அதெல்லாம் எதற்கு? எனக்கு நீங்கள் சம்பளம் கொடுத்து விட்டீர்கள், அதுவே போதும் என்று சொன்னதாக கூறி இருக்கிறார். தற்போது இதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement