ரகுல் ப்ரீத் முதல் கேத்ரின் தெரசா வரை. படத்திற்காக புகைபிடித்த நடிகைகள். புகைப்படத்துடன் இதோ.

0
2874
rakulpreet
- Advertisement -

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது விளம்பரங்களிலும், போஸ்டர்கள், பேனர்கள் என்று பல இடங்களில் பார்த்திருப்போம். முன்னெல்லாம் சினிமா உலகில் நடிகர்கள் தான் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பார்கள். அதுவே பெரிய சர்ச்சையாக எழுந்து உள்ளது. புகைப்பிடிக்கும் காட்சிகளை படங்களில் வைப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. ஏன் என்றால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகள் செய்யும் மாதிரியே செய்வார்கள். அதனால் தான் இதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
rakul

- Advertisement -

தற்போது சில படங்களில் கதைக்கு தேவைப்படுவதால் நடிகைகளும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கின்றனர். சமீப காலமாக நடிகைகளும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கிறார்கள். இது மிகப் பெரிய குற்றச்சாட்டு ஆகவே ரசிகர்கள் வைக்கிறார்கள். அதிலும் படம் வெளியாகும் முன் டீசரில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வந்தால் போதும் சோசியல் மீடியாவில் அந்த படங்களை குறித்து தாறுமாறாக விமர்சனத்தை எழுதி விடுகிறார்கள்.

இதையும் பாருங்க : எனக்கு 41 வயதாகிறது. ஆனால், இதற்காக மனைவியிடம் எனக்கு 15 வருடம் தேவைப்பட்டது – விஜய் சேதுபதி.

-விளம்பரம்-

படத்தில் நடிகைகள் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கும் புகைப்படங்கள் வெளிவந்தால் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இவர்கள் உண்மையாலுமே இந்த பழக்கத்தில் உள்ளார் என்று தெரியவந்தால் ரசிகர்களுக்கு மிகவும் வேதனைக்குரிய விஷயம் தான். மேலும், உண்மையாலுமே நடிகைகளுக்கு நிஜ வாழ்க்கையிலும் புகைபிடிக்கும் பழக்கம் உண்டு என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான பல நடிகைகள் இந்த மாதிரி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்து உள்ளார். அதில் சில நடிகைகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

View this post on Instagram

List Of Actresses Who Acted In Smoking Scenes Boldly

A post shared by Behind Talkies (@behindtalkies) on

அதுல்யா ரவி–ஏமாலி

மஹிமா –அசுர குரு

ஓவியா — 90 ml

ஹன்சிகா மகா, போக்கிரி ராஜா

மும்தாஜ் — ராஜாதிராஜா

சமந்தா– 10 எண்றதுக்குள்ள

ரைசா -பியார் பிரேமா காதல்

ரகுல் ப்ரீத் சிங் – மன்மதுடு 2

என்று பல பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இதில் சில பேர் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் புகைப்பிடித்தல், மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். இதனால் தங்களுடைய குடும்ப வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் பல பேர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். இதனை ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் தான் போல என்று கலாய்த்து வருகின்றனர்.

Advertisement