எனக்கு 41 வயதாகிறது. ஆனால், இதற்காக மனைவியிடம் எனக்கு 15 வருடம் தேவைப்பட்டது – விஜய் சேதுபதி.

0
154916
vijaysethu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் இவர் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். அந்த அளவிற்கு அவருடைய எதார்த்தமான நடிப்பும், கதைகளும் இருந்தது. தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
vijaysethupathi wife

- Advertisement -

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு முன்பு கூட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ரஜினியின் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே ஹீரோக்கள் படங்களில் கதாநாயகனாக நடித்த உடன் கடைசி வரை கதாநாயகனாக தான் நடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருப்பார்கள். ஆனால், அதெல்லாம் உடைத்தெறிந்து நின்றவர் விஜய் சேதுபதி. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதை நிரூபித்தவர். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : மணிமேகலையால் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸை மிஞ்சிட்டோம். புகழ்ந்து தள்ளிய விஜய் டிவி சீரியல் குழுவினர்.

-விளம்பரம்-

தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல், லாபம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சமீபத்தில் பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அப்போது கல்லூரியில் நடந்த விழாவில் விஜய் சேதுபதி அவர்கள் தன்னுடைய சினிமா பயணத்தில் நடந்த சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதிலும் குறிப்பாக பெண்களைக் குறித்தும், தன்னுடைய மனைவி குறித்தும் பேசி உள்ளார்.

அதில் அவர் கூறியது, எனக்கு இப்போது 41 வயதாகிறது. என் மனைவியை புரிந்து கொள்வதற்கு எனக்கு பதினைந்து வருடங்கள் ஆனது. பெண்களை அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது. பெண்களை எப்போதும் ஏளனமாக நினைக்காதீர்கள். பெண்களோடு போட்டி போடும் வெல்ல முடியாது. அதனால் எந்த ஒரு பெண்ணிடமும் போட்டி போடாதீர்கள். எந்த ஒரு பெண்ணையும் சீப்பாக பேசாதீர்கள். நம் வாழ்க்கையில் வரப்போகிற பெண் உன்னதமானவர். அவரை புரிந்து கொள்ள நமக்கு அதிக நேரம் தேவைப்படும் என்று கூறினார்.

Advertisement