புறநானூறு படத்தில் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது இவர் சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சுதா கொங்காரா மற்றும் அருண் விஷ்வா இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இது இவருடைய நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
புறநானூறு படம்:
தற்போது இந்த படத்திற்கான முதல் பட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுடன் இந்த படத்தில் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதற்காக டெஸ்ட் லுக் எல்லாம் நடைபெற்றதாம். இப்படி இருக்கும் நிலையில் புறநானூறு படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் ரஜினியின் கூலி படம் என்று கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் குறித்த தகவல்:
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கூலி படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடக்கிறது. கூலி படத்தினுடைய படப்பிடிப்பு ஜனவரி மாதத்தின் இறுதியில் முடிவடைய இருக்கிறது. ஒட்டுமொத்த பணிகளும் ஜூன் மாதத்திற்குள் முடிந்துவிடும். ஆனால், அதற்கு முன்பே புறநானூறு படபிடிப்பு தொடங்க இருக்கிறார்கள். இதனால் தான் லோகேஷ் கனகராஜ் விலக இருப்பதாக கூறப்படுகிறது.
விலக காரணம்:
அது மட்டும் இல்லாமல் டிசம்பரிலேயே புறநானூறு படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது அடுத்த ஆண்டு தான் தொடங்க இருக்கிறார்கள். காரணம், ஏ.ஆர் முருகதாஸினுடைய படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. அதில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருப்பதால் அதனுடைய படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு தான் புறநானூறு படத்தினுடைய படப்பிடிப்பு வேலைகள் நடைபெறும்.
படம் குறித்த அப்டேட்:
இதற்கிடையில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படத்தையும் முடித்த பிறகு தான் புறநானூறு படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், புறநானூறு படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக அதர்வாவை நடிக்க வைக்க படக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். தற்போது சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் அமரன் படம் மிக பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.