லோகேஷ் கனகராஜின் அம்மா, அப்பா புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இவர் முதல் படத்திலே சினிமா உலகில் தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான படத்தை கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. பின் இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
விக்ரம் படத்தின் கதை:
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார்.
விக்ரம் படம் பற்றிய தகவல்:
போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களை பழிவாங்க நினைக்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது.
லோகேஷ் இயக்கும் அடுத்த படம்:
ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. பிரபலங்கள் பலரும் இந்த படம் குறித்து நல்ல விதமாக கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறார்கள். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்குகிறார். இந்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
லோகேஷ் கனகராஜ் குடும்ப புகைப்படம்:
இது உறுதியான தகவல் என்று லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் உடைய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சிறுவயதில் அப்பா மற்றும் அம்மா மற்றும் தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். அந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.