விஜய் சேதுபதி மட்டுமல்ல சிவகார்த்திகேயனும் உதவி செஞ்சிருக்கார் – ஆதித்யா லோகேஷ்ஷின் தற்போதைய நிலை.

0
86868
- Advertisement -

ஆதித்யா சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் லோகேஷ். இவர் மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். பின் இவர் வெள்ளித்திரையில் நானும் ரவுடிதான், ஜாம்பி என பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனைக் கேட்ட இவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து லோகேஷ் இடம் கேட்டபோது அவர் கூறியது, எனக்கு முதல் அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. இன்னும் ஒரு அறுவை சிகிக்சை இருக்கிறது.
எனக்கு ரொம்ப நாளாகவே பிளட் பிரஷர் இருந்து இருக்கு. ஆனால், அது எனக்கு தெரியவில்லை.

-விளம்பரம்-

நான் குண்டாக இருப்பதனால் ஒபிசிட்டி பிரச்சனையும் இந்த ஸ்ட்ரோக்கு காரணம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். எனக்கு முதல் ஆபரேஷன் முடிந்து பத்து நாட்கள் வரைக்கும் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. நான் பிளட் பிரஷர் அதிகமாக இருந்தால் தான் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று நினைத்தேன். அப்புறம் தான் எனக்கு நடந்ததை சொன்னார்கள். மூளையில் ரத்தம் கட்டி இருந்ததற்காக எனக்கு ஆபரேஷன் பண்ணினார்கள். அப்போது மூலையில் இருந்த ஸ்கல்லை எடுத்திட்டு தான் ஆபரேஷன் பண்ணாங்க. இப்போ அந்த ஸ்கல்லை வைப்பதற்கு திரும்ப ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டுமாம்.

இதையும் பாருங்க : ஆண் நண்பர்களுடன் வேஷ்டி சட்டையில் போஸ் கொடுத்த அமலா பால்.

- Advertisement -

அதற்கு பிறகு நான் நல்ல ஆகிவிடுவேன் என்று சொன்னார்கள். ஏற்கனவே என்னுடைய முகத்தோற்றம் கொஞ்சம் மாறி தான் இருக்கும். ஆபரேஷனுக்கு பிறகு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. என்னை பார்ப்பதற்காக விஜய் சேதுபதி அண்ணா ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தார். அவர் உடன் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அவர் மட்டும் இல்ல என்னுடைய நண்பர்கள் எல்லாம் என்னை பார்க்க வந்தார்கள். என்னுடைய கால் சீக்கிரமாகவே குணமாகி விடும் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். கையும் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி கொண்டு வருகிறது. என்னுடைய ஆபரேஷன் செலவுக்குப் மிகப்பெரிய தொகை தேவைப்பட்டது.

டிவியில் இருந்து தான் எனக்கு உதவி செய்தார்கள். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன்அண்ணா, விஜய் சேதுபதி அண்ணாவும் ஆப்ரேஷனனுக்கு தேவையான பணத்தை கொடுத்தார்கள். சேனல் நண்பர்களும் நிறைய உதவி பண்ணார்கள். நிறைய மக்களும் எனக்கு உதவி செய்தார்கள். இவ்வளவு நாள் நான் மக்களை மகிழ்வித்ததற்கு பரிசாக அவர்கள் என் உயிரை காப்பாற்றி கொடுத்தார்கள். இந்த சமயத்தில் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் சீக்கிரம் குணம் அடைந்து வந்து மக்கள் எல்லாரையும் சந்தோஷப்படுத்தனும். இதுதான் என் ஆசை என்று புன்னகையுடன் கூறினார்.

-விளம்பரம்-
Advertisement