ஹாஸ்பிடல் பில் கூட காமிக்கிறோம், ப்ளீஸ் உதவுங்க. நண்பனுக்காக உதவி கேட்ட அடடே கோபி.

0
7742
lokeshpop

ஆதித்யா சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் லோகேஷ். இவர் மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். பின் இவர் வெள்ளித்திரையில் நானும் ரவுடிதான், ஜாம்பி என பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனைக் கேட்ட இவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து லோகேஷ் இடம் கேட்டபோது அவர் கூறியது, எனக்கு முதல் அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. இன்னும் ஒரு அறுவை சிகிக்சை இருக்கிறது.மூலையில் இருந்த ஸ்கல்லை எடுத்திட்டு தான் ஆபரேஷன் பண்ணாங்க. இப்போ அந்த ஸ்கல்லை வைப்பதற்கு திரும்ப ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டுமாம்.அதற்கு பிறகு நான் நல்ல ஆகிவிடுவேன் என்று சொன்னார்கள். ஏற்கனவே என்னுடைய முகத்தோற்றம் கொஞ்சம் மாறி தான் இருக்கும். ஆபரேஷனுக்கு பிறகு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது அறுவை சிகிச்சைக்காக லோகேஷ் பாப்பிற்கு 5 லட்ச ரூபாய் தேவை படுகிறதாம். இதனால் மக்களிடம் உதவி கேட்டுள்ளனர் லோகேஷ் பாப்பின் குடும்பத்தினர். இதுகுறித்து லோகேஷ் பாப்புடன் மொக்கை ஆப் தி டே நிகழ்ச்சியில் வந்த குட்டி கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குட்டி கோபி, ஐந்து மாதத்திற்கு முன்னர் அவருக்கு மண்டை ஓட்டில் முதல்கட்ட அறுவை சிகிச்சை நடந்தது அனைவருக்கும் தெரியும்.

அப்போது நாங்கள் அனைவரும் பணம் திரட்டி அவருக்கு உதவி செய்தோம். தற்போது இன்னும் 20 நாளில் இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. ஆனால், எங்களிடமும் அவரது குடும்பத்தாரிடமும் பணம் இல்லை. ஆகவே உங்களால் முடிந்த பண உதவியை செய்யுங்கள். மருத்துவச் செலவு 5 லட்சம். உண்மையிலேயே எங்களுக்கு சிகிச்சைக்காக பணம் வேண்டும் நாங்கள் இறுதியில் மருத்துவ ரசீதை கூட காண்பிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement