அப்பாவுக்கு சர்ஜரி பண்ணி காலே எடுத்துட்டோம் – எமோஷனலாக லொள்ளு சபா உதயாவின் மகள் சொன்ன தகவல்

0
170
- Advertisement -

லொள்ளு சபா உதயாவின் தற்போதைய நிலை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி 2003 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இது முழுக்க முழுக்க நகைச்சுவை நிகழ்ச்சி. இதில் சந்தானம், ஜீவா, லொள்ளுசபா மனோகர், பாலாஜி, சுவாமிநாதன், ஜாங்கிரி மதுமிதா உட்பட பல முன்னணி நடிகர்கள் போட்டியாளர்களாக கலந்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் பல பேர் தற்போது சினிமாவுலகில் பிரபலமான நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. இப்போதும் இந்த லொள்ளு சபா நிகழ்ச்சியின் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் சிரிக்கோ உதயா.

- Advertisement -

உதயா குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகர் என்பதை தாண்டி
இசை கலைஞரும் ஆவார். இவருக்கு சிறு வயதிலிருந்து இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதே போல் சினிமாவில் இருந்து கொண்டு இவர் வயலின் வாசித்து வருகிறார்.

உதயா உடல்நிலை:

கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக இவர் இசைத் துறையில் வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இவர் படங்களில் நடித்தும் வருகிறார். குறிப்பாக, சந்தானத்துடன் சேர்ந்து இவர் 15 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் காமெடி ஸ்கிரிப்டுகளை எல்லாம் பணியாற்றி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே இவர் சர்க்கரையை நோயினால் அவஸ்தைப்பட்டு வந்திருக்கிறார்.

-விளம்பரம்-

உதயா மகள் பேட்டி:

தற்போது இவர் ஓமந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக சிரிக்கோ உதயாவின் மூத்த மகள் அளித்த பேட்டியில், அப்பாவுக்கு இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லை. சர்க்கரை நோய் கொஞ்சம் அதிகமானதால் கடந்த ஆறு மாதங்களாகவே ரொம்ப உடல் நிலை குறைவாக தான் இருக்கிறார். அவருக்கு எதிர்ப்பு சக்தியும் குறைவாக தான் இருக்கிறது. காலில் ரத்த ஓட்டமே சரியில்லை.

உதயா தற்போதைய நிலை:

அதோடு சர்க்கரையின் நோயினாலும் அவருக்கு சர்ஜரி பண்ணி காலெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. பலரும் வலது கால் என்று போட்டுட்டு இருக்காங்க. சர்ஜரி பண்ணி இடது கால் முட்டிக்கு கீழே எடுத்து இருக்கிறார்கள். அப்பா இப்ப நல்லா இருக்காரு. அப்பாவிற்காக எல்லோரும் வேண்டிக் கொள்ளனும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் பசங்கள் மூணு பேர் இருக்கிறோம். அப்பாவை நாங்க தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சினிமா துறையில் இருக்கிற யாருக்குமே நாங்க அப்பாவோட நிலைமையை பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்பாவோட பழக்கத்தினால் சிலர் உதவி பண்றதுக்கு இருக்கிறார்கள். நான் இந்த விஷயத்தை பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் ஃபேமிலிகுள்ளயே முடித்துக் கொண்டோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement