சந்தானம் எல்லா படத்துலயும் கூப்பிட மாட்டார் அதுக்கு காரணம் ? – 3 வருசமா வேல இல்ல. லொள்ளு சபா மனோகர் வேதனை.

0
1582
manohar
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் இருந்து எத்தனையோ பேர் தற்போது சினிமாவில் ஹீரோவாகவும் காமெடியங்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். சந்தானம், சிவகார்த்திகேயன் துவங்கி சமீபத்தில் ஹீரோவாகி இருக்கும் அஸ்வின் முதல் பல பேர் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்கள் தான். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பல காமெடி நடிகர்கள் சினிமாவில் நுழைந்தனர். அந்த வகையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்பவர் லொள்ளு சபா மனோகர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

இதனால் இவரை அனைவரும் லொள்ளு சபா மனோகர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். மேலும், இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் எப்எம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் குறிப்பாக மலைமலை, மாஞ்சாவேலு, அலெக்ஸ்பாண்டியன், சிகரம்தொடு, என்னமோ ஏதோ, நண்பேண்டா, மனிதன், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

கொரோனாவால் முடங்கிய வேலை

கடைசியாக இவர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு யோகி பாபு நடிப்பில் வெளிவந்த பேய்மாமா என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய நிலை குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, கொரோனா வருவதற்கு முன்பு மாதம் 30 நாளும் நான் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டு தான் இருந்தேன். இந்த மூன்று வருடங்களாக எனக்கு எந்த வேலையும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன்.

சந்தானம் வடிவேலு படங்கள் குறித்து

பணம் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டேன். மேலும், சந்தானம், வடிவேலு எல்லா நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். இருந்தாலும் அவர்கள் எல்லாம் அவர்களுக்கு தேவையான நபர்களை தான் கூடவே வைத்து சம்பளம் போட்டு நடிக்க வைக்கிறார்கள். நம்ப அப்பப்ப அவர்களுக்கு தேவைப்படும் போது கூப்பிடுவார்கள். அதனால் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு தான் வாய்ப்பு அதிகம் சினிமாவில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

பிறந்து வளர்ந்து வீடு :

தேவைப்படும்போது நம்மை கூப்பிடுவார்கள். பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடத்தை சம்பாதித்தது நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய பழைய வீட்டை பார்த்து ஷாக் ஆகி விடாதீர்கள். இது மிகப் பழமையான வீடு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இங்கு தான். எனக்கு பக்கத்தில் உள்ள எல்லா வீடுகள் பெருசா இருந்தாலும் ஏன் உங்கள் வீட்டை இப்படி வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்பார்கள்.

The rise and fall of 'Lollu Sabha': Director Rambala on the untold story -  The Hindu

25 வருசமாக இருக்கும் பிரச்சனை

அதுவே இடிந்து விழுகிற கண்டிஷனில் தான் இருக்கு. அதனால் எதற்கு ரெடி பண்ணனும் என்று விட்டுட்டேன். அதுமட்டுமல்லாமல் இந்த வீடு 25 வருடமாக கேஸில் இருக்கிறது என்று கூறிய மனோகர் இருக்கிற வரைக்கும் இருக்கலாம் அதற்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நகைச்சுவையாக பேசினார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement