‘ஜோசப் விஜய்’ – பல ஆண்டுகாலமாக இருந்து வரும் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் வீட்டின் முன் இருக்கும் விஷயம்

0
506
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
வம்சி இயக்கி வரும் இப்படத்தின் நான்காம்கட்ட படப்பிடிப்பு தற்போது வைசாக்கில் நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியான சமையத்தில் மதம் சார்ந்த பல சர்ச்சைகளும், விமர்சனங்களுக்கும் தனிப்பட்ட முறையில் விஜய்யின் மேல் கூறப்பட்டது.விமர்சனங்களுக்கு பதிலடி அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன் பீஸ்ட் படத்திற்காக அவர் கொடுத்திருந்த பேட்டியில், இயேசு, பிள்ளையார், ஹல்லா என மூவரையும் நான் வணங்குவேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

2017 தீபாவளிக்கு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் ரிலீஸ் ஆனபோது . ‘’ரசிகர்கள் பெரிதாக ரசிக்கவில்லை’’, ‘’படத்தின் நீளம் அதிகம்’’, ‘’ ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி’’ என ரிலீஸான அன்றைய தினம் நெகட்டிவ் விமர்சனங்களே வர படத்துக்கான பரபரப்பே அமுங்கிபோனது. அட்லி இடிந்துபோய் உட்கார்ந்திருந்த அந்த நேரம்தான் அப்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை பரபர பிரஸ்மீட்டை கூட்டினார். ‘மெர்சல்’ படத்தில் மோடி அரசின் ஜிஎஸ்டி-யை விமர்சித்து விட்டார்கள் என தமிழிசை கூறி இருந்தார்.

- Advertisement -

ஜோசப் விஜய் என மத சாயம் :-

இதை அடுத்து ஹெச்.ராஜா தன் பங்குக்கு ‘ஜோசப் விஜய்’ என மதச்சாயம் பூச ‘மெர்சல்’ படத்துக்கு உலகளாவிய பப்ளிசிட்டி கிடைத்தது. சுமாராகப் போயிருக்க வேண்டிய ‘மெர்சல்’ மிகப்பெரிய ஹிட் ஆனது. மத அடையாளத்தை மறைப்பார் விஜய் என எல்லோரும் எதிர்பார்க்க படம் ரிலீஸாகி ஒருவார கலெக்‌ஷன் முடிந்ததும் ‘ஜோசப் விஜய்’ சிவப்பு வண்ணத்தில் தன்னுடைய முழுப் பெயரையும் போல்ட் செய்து ‘மெர்சல்’ படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்தவர்களுக்கு நன்றி’’ என அறிக்கை வெளியிட்டு இன்னும் தன்னுடைய மாஸை அதிகப்படுத்திக் கொண்டார்.

கிறிஸ்தவர் என்ற அடிப்படையில் நான் பேசவில்லை :-

ஜோசப்’ விஜய் எங்கள் எதிரி இல்லை. அவர் பரப்பும் பொய்யைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ‘ஜோசப்’ விஜய்க்கு வாழ்த்து சொல்வேன். தமிழகத்தில் ஜன சங்கத்தை நிறுவிய டாக்டர் வி.கே.ஜான் ஒரு கிறிஸ்தவர். கிறிஸ்தவர் என்ற அடிப்படையில் விஜய்யை எதிர்க்கவில்லை. கோயில்களுக்குப் பதிலாக கல்வி நிலையங்களும், மருத்துவமனைகளும் கட்டச் சொல்லும் ‘ஜோசப்’ விஜய்யை கேள்வி கேட்டால் கொந்தளிக்கும் ஊடகங்கள் தேவாலயங்களுக்கு பதில் பள்ளிகள் கட்ட வேண்டும் என்று நான் ஒரு கருத்து சொல்லியிருந்தால் எனக்கு மதவாதி பட்டம் தந்திருக்கும்தானே.

-விளம்பரம்-

‘ஜோசப்’ விஜய் என மத ரீதியிலான தாக்குதலை ஏன் தொடர்ந்து முன்வைக்கிறீர்கள்?

விஜய்யின் முழுப்பெயர் ஜோசப் விஜய் தானே. அவரது வாக்காளர் அடையாள அட்டையில் அப்படித்தானே இருக்கிறது. அவரது முழுப் பெயரை நான் குறிப்பிட்டு அழைக்கிறேன். அதில் ஊடகங்கள் இப்படி பதற்றம் கொள்வது ஏன்? என்னை யாராவது ஹரிஹரன் ராஜா என அழைத்தால் நான் இயல்பாகவே இருப்பேன்.

6

விஜய் வீட்டு வாசலில் இந்து கடவுள் :-

இந்நிலையில், தற்போது மீண்டும் விமர்சனம் செய்த பலருக்கு சரியான பதிலடித்து கொடுத்துள்ளார் நடிகர் விஜய். ஆம், தனது வீட்டின் வாசலில் இரு பக்ககளிளும் இந்து கடவுகள் ஆன பிள்ளையார், அம்மன் சிலையை வைத்துள்ளார் நடிகர் விஜய்.
இதை பார்த்த விஜய்யின் ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தை பதிவு செய்து பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதன் முலம் நடிகர் விஜய் தான் மத சாயம் பூசுபவன் இல்லை என்று நிருபித்துள்ளார்.

Advertisement