அரசாங்கம் தடை விதித்தும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாட பிரபலங்கள் பலரும் விளம்பரம் செய்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்தும், தற்கொலை செய்தும் இருக்கிறார்கள். மேலும், இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.

ஆனால், இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் தான் நடித்து மக்கள் மத்தியில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இது குறித்து சோசியல் மீடியாவிலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனை அடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம் பயங்கரமாக வைரலாகி இருந்தது. பின் பல கட்ட அழுத்தங்களுக்கு பிறகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஒப்புதல் வழங்கியிருந்தார்.

தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் பணம் அல்லது பிற பங்குகளை வைத்து ஆன்லைன் சூதாட்டம்/ஆன்லைன் கேம்களில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 5,000 வரை அபராதம் என்று இரண்டும் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட சேவை அல்லது போக்கர் மற்றும் ரம்மி விளையாட்டுகளை வழங்கும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

Advertisement

அதோடு ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளை விளையாட மக்களை தூண்டுபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை அல்லது அபராதம் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக லோட்டஸ் 365 என்ற லிங்கில் விளையாட விளம்பரம் செய்திருக்கிறார்கள். இதில் காஜல் அகர்வால் உட்பட பல பிரபலங்கள் இந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள்.

Advertisement

இதனை அடுத்து இந்த ரம்மி ஆப்பை சோசியல் மீடியாவில் பிரபலமான அமலா சாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இது நல்ல தரமான விளையாட்டு. இது கடவுள் கொடுத்த வரம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.இவரை தொடர்ந்து நடிகை ஷிவானி நாராயணன், லாஸ்லியா என பலரும் இந்த விளையாட்டு குறித்து போஸ்ட் போட்டிருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய போஸ்ட் தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து வழக்கறிஞர் விக்னேஷ் முத்துக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பது, லோட்டஸ் 365 என்ற செயலியை அரசாங்கமே தடை செய்திருக்கிறது. இருந்தும் அதில் ஆன்லைன் ரம்மி போன்ற பல விளையாட்டுகள் இருக்கிறது. தற்போது தான் அரசாங்கம் கஷ்டப்பட்டு இந்த விளையாட்டை விளையாட தடை விதித்து இருக்கிறது. இருந்தும் சில இன்ஸ்டாகிராம், யூடியூப் பிரபலங்கள் இந்த விளையாட்டு விளையாடுவதற்கு விளம்பரம் செய்து வருகிறார்கள். இப்படி அரசாங்கம் கூறியும் தடை செய்யப்பட்ட விளையாட்டை விளம்பரம் செய்வதற்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement