பாகிஸ்தானில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் நேற்று மாலை 3 மணி அளவில் ராணுவ முகாமிலிருந்து ராவல்பிண்டி வந்தடைந்தார். ராவல்பிண்டியில் இருந்து லாகூருக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார்.

நேற்று இரவு 9 மணிக்கு இந்தியாவிடம் ஒப்படைக்கபட்டார் அபிநந்தன். எதிரி நாட்டிடம் சிக்கிய போதும் சொந்த நாட்டின் ரகசியங்களை காப்பாற்றி ஒரு ராணுவ வீரராகவும்,நாட்டின் குடிமகன் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற படத்தை வெறும் 1 நிமிட வீடியோவில் நிரூபித்தவர் அபிநந்தன்.

Advertisement

தற்போது இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளிலும் சூப்பர் ஹீரோவாக பார்க்கபடுகிறார். இவரது பெயரை பலரும் பெருமையாக தேடி வரும் நிலையில் ஒரு சில கீழ்த்தரமான புத்திகளை கொண்டவர்கள் இவர் என்ன ஜாதி என்பதை கூகுளில் தேடி வருகின்றனர்.

Advertisement

இதுவரை அபிநந்தன் என்ன ஜாதி என்று கூகுளில் 10 லட்சம் பேர் தேடியுள்ளனர். நாட்டிற்காக பாடுபட்ட ஒரு உன்னத மனிதரை கொச்சை பசுத்துவது போல இந்த செயல் இருக்கிறது. இந்த செயலின் மூலம் இந்த தலைமுறையிலும் ஜாதி வெறி பிடித்த சமூகத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.

Advertisement

இந்திலையில் அபிநந்தனின் ஜாதி குறித்து தேடியவர்களை பற்றி பிரபல வானொலித் தொகுப்பாளர் லவ் குரு என்று அழைக்கப்படும் ராஜவேல், இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிர்பார்த்தது போலவே, அபிநந்தன் வர்த்தமான் என்ன ஜாதி என்ற ஆராய்ச்சியில் ஒரு க்ரூப் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து இப்படி ஒரு ஜாதி வெறி பிடித்த ஜெனரேஷன் இதற்கு முன் தமிழ்நாட்டில் இருந்திருக்குமா என ஐயமாக இருக்கிறது. சமூகவலைத்தளங்கள் எங்கும் ஜாதி வெறி பிடித்த சைக்கோக்களின் பதிவுகள் நிரம்பி வழிகிறது. குறைந்தபட்சம் அபிநந்தனையாவது இந்தியாவுக்கு பொதுவாய் வைப்போம்! என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Advertisement