ரசிகர்கள் கொண்டாடும் ‘லவ் டுடே’ படம் குறித்து ப்ளூ சட்டை என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
699
- Advertisement -

சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தின் ப்ளூ சட்டை விமர்சனத்தை கண்டு ரசிகர்களே வியந்து போய் இருக்கின்றனர். தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார். ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள்.

- Advertisement -

அப்போது இவானாவின் அப்பா சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார். அவரிடம் தங்களுடைய காதலை பற்றி பேசுகிறார் பிரதீப். உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார்.அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் நீங்கள் இருவரும் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள்.

அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் காதலர்கள் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.தையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இன்றைய கால காதல் எப்படி இருக்கிறது? என்பதை தெளிவாக படத்தில் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். இந்த படம் முதல் நாளே நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பெரும்பாலான விமர்சகர்களும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஆனால், பெருமபாலான படத்தை கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை இந்த படத்திற்கு என்ன விமர்சனம் கொடுப்பார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது வந்தது. இப்படி ஒரு நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ப்ளூ சட்டை இந்த படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து ரசிகர்களை பெரும் ஷாக்கில் ஆழ்த்தி இருக்கிறார்.

அதில் இந்த படத்தின் கதை, திரைக்கதை, படத்தின் சுவாரசிய காட்சி என்று அனைத்தும் அருமையாக இருந்தது. இந்த படத்தை எடுக்கும் முன்னரே இந்த படத்தின் Scriptயை மிகவும் வலுவாக எழுதி இருப்பதால் தான் இந்த படம் ஒரு தெளிவான படமாக வந்து இருக்கிறது. தீர்வு சொல்ல முடியாத இந்த கதையில் ராதிகா மற்றும் யோகி பாபாவை வைத்து நியாயப்படுத்தி இருந்தார்கள். இங்கே எல்லாம் இப்படித்தான் இருக்கும் இதையெல்லாம் இப்படித்தான் கடந்து போக வேண்டும் என்று காண்பித்து இருந்தது எல்லாம் எல்லாரும் ஏற்றுக் கொள்வதாக தான் இருந்தது.

Advertisement