இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லப்பர் பந்து. இந்த படத்தை எஸ் லட்சுமணன் குமார் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைத்து இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் லப்பர் பந்து படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். இவர் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆடுவதில் சிறந்த வீரராக இருக்கிறார். இவர் அடிக்கும் ஒவ்வொரு பந்துமே சிக்ஸர் தான். எப்போதுமே இவர் விளையாடும் டீம் தான் கோப்பையை தட்டிச் செல்லும். ஆனால், இவர் கிரிக்கெட் விளையாடுவது அவருடைய மனைவிக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்னொரு பக்கம் ஹரிஷ் கல்யாண் பந்துவீச்சில் பட்டய கிளப்புபவர்.
இவர் பந்து வீசினால் பேட்டிங் பண்ணும் அனைவருமே தடுமாறுவார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தினேஷ் உடைய ஆட்டத்தை தெரிந்த ஹரிஷ் கல்யாண் எப்படியாவது அவரை விக்கெட் எடுக்க வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறார். அந்த சமயத்தில் தான் அட்டகத்தி தினேஷ் உடைய மகள் தான் என்று தெரியாமலேயே ஹரிஷ் கல்யாண் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் தினேஷ்- ஹரிஷ் கல்யாண் இருவருமே கிரிக்கெட் போட்டியில் மோதி கொள்கிறார்கள்.
அதில் ஹரிஷ் கல்யாண் வீசிய பந்தின் முதல் ஓவரிலேயே தினேஷ் விகேட்டை இழக்கிறார். இதனால் தினேஷ்- ஹரிஷ் கல்யாண் இருவருக்கும் இடையே கடுமையான ஈகோ போட்டி ஏற்படுகிறது. அதற்குப்பின் என்ன நடந்தது? இருவருடைய வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனை வந்தது? ஹரிஷ் கல்யாண் காதலிக்கும் விஷயம் தினேஷுக்கு தெரிந்ததா? என்பது படத்தின் மீதி கதை. படத்தில் ஹரிஷ் கல்யாண், தினேஷ் உடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
ஹரிஷ் கல்யாண் கிரிக்கெட் விளையாடும் விதம், காதல் காட்சி என அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார். இவரை அடுத்து அட்டகத்தி தினேஷ் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஈகோவினால் ஒருவருடைய மனநிலை எப்படி இருக்கும்? எப்படி நடந்து கொள்வார்கள்? என்பதை அட்டகத்தி தினேஷ் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் அரசியலையும், கிரிக்கெட் விளையாட்டையும் இயக்குனர் காண்பித்த விதம் நன்றாக இருக்கிறது. எங்குமே சலிப்பை ஏற்படுத்தாத வகையில் இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். பெரிதாக இந்த படத்தில் குறை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லை. இதுவே படத்திற்கு பெரிய பலமாகவும் அமைந்திருக்கிறது. அதேபோல் பின்னணி இசையும் பாடல்களுமே படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.
நகைச்சுவை, எமோஷனல், காதல் காட்சிகள் என அனைத்துமே பஞ்சமில்லாமல் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். குறிப்பாக, இந்த படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விருந்து என்று சொல்லலாம். அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பிறகு அட்டகத்தி தினேஷ்- ஹரிஷ் கல்யாணத்துக்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்திருக்கிறது.
நிறை:
அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பு சிறப்பு
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
கிரிக்கெட், எமோஷனல் காட்சிகள் அருமை
கதைக்களம் நன்றாக இருக்கிறது
கிளைமேக்ஸ் காட்சி சிறப்பு
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவுமே இல்லை
மொத்தத்தில் லப்பர் பந்து- எலிக்காப்டர் ஷாட் தான்