200 கோடி தாண்டிய வலிமை வசூல் – 100 கோடி கேட்ட அஜித்துக்கு கடைசியில் கொடுகப்பட்ட சம்பளம் எத்தனை கோடி தெரியுமா ?

0
1125
- Advertisement -

அஜித் கேட்ட சம்பளத்தை விட தயாரிப்பாளர் கொடுத்திருக்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசானது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார் மற்றும் போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள். தற்போது வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61’ படத்தின் முதல்கட்ட வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர்.

- Advertisement -

ஏகே 61 படம் பற்றிய தகவல்:

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து அஜித்தின் ஏகே 61 படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அஜித்தின் 62வது படம் பற்றிய விவரம்:

இந்த நிலையில் அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. சிம்புவின் போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இவர் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளார்கள்.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணி:

அதுமட்டும் இல்லாமல் விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற பாடலையும், வலிமை படத்தில் நாங்க வேற மாதிரி மற்றும் அம்மா பாடலையும் எழுதி இருக்கிறார். தற்போது இவர் அஜீத்தை வைத்து படம் இயக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த நிலையில் ஏகே 62 படத்தில் அஜித் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனத்திடம் அஜித் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும்,

ஏகே 62 படத்தில் அஜித்தின் சம்பளம்:

ஆனால் லைகா நிறுவனம் 105 கோடி தருவதாக ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பளம் குறித்த தகவல் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவருக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் என்பதால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் வலிமை படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி 300 கோடியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. இதனையடுத்து அஜித்தின் சம்பளம் உயரும் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement