வைரமுத்துவால் தான் என் பெயரையே மாற்றினேன், அவர் செய்ததை மறக்க முடியாது – கவிஞர் சினேகன் ஓபன் டாக்

0
132
- Advertisement -

வைரமுத்து குறித்து பாடகர் சினேகன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. இவர் 2500க்கும் மேல் பாடல்கள் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பின் இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சீரியலில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினேகன் தன்னுடைய சினிமா பயணம் குறித்து கூறியிருந்தது, நான் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தவன். நான் வைரமுத்து சாரிடம் நான்கரை ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறேன். நான் அவருடைய வீட்டில் எல்லா வேலையும் செய்வேன். அவருக்கு போன் அட்டென்ட் பண்ணுவது, ரெக்கார்டிங் போறது, அவருக்கு சாப்பாடு பரிமாறுவது என்று எல்லா வேலையுமே செய்து இருக்கிறேன்.

- Advertisement -

சினேகன் பேட்டி:

நான் அவரோடு இருந்த காலத்தில் தான் வைரமுத்து சார் அவருடைய புத்தகங்களை வெளியிட சூர்யா பதிப்பகம் என்று ஒன்று ஆரம்பித்தார். நான் அங்கு தான் ஒரு புத்தகத்தை எப்படி படிக்கணும், விற்பனை செய்யணும் என்று ஆரம்பம் முதல் முடிவு வரை எல்லாமே கற்றுக் கொண்டேன். அதற்குப் பிறகு நான் அவரோட அக்கவுண்ட்ஸ் எல்லாம் பார்க்க ஆரம்பித்தேன். அவருடைய பொன்மணி மாளிகையின் ஒவ்வொரு செங்கிலும் என்னுடைய உழைப்பு இருக்கு. நான் அவரிடம் வேலை செய்ய சேர்ந்த போது அவர், என் கவிதையை ரசிக்க தெரிந்தவன் தான் தேவை தவிர அதை எழுதக்கூடியவன் இல்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். இதனாலே நான் அவரிடம் கவிதை எழுத தெரியும் என்று சொல்லவே இல்லை மறைத்து விட்டேன்.

சினிமா பயணம்:

அதனால் அவரிடம் வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் நான் சிநேகன் என்ற பெயரில் பத்திரிகையில் கவிதை எழுதி அனுப்பிக்கொண்டு இருந்தேன். ஏன்னா என்னுடைய உண்மையான பெயர் செல்வம். அந்த பெயரை பயன்படுத்தினால் வைரமுத்து கண்டுபிடித்து விடுவார் என்று தான் நான் பெயரை மாற்றிக் கொண்டேன். என்னை முழுவதுமாக சினேகன் என்று அங்கீகரித்தது கே.பாலச்சந்தர் சார் தான். அவர் தான் என்னோட முதல் புத்தகத்தை வெளியிட்டார். அப்போது அவர், உன் பெயர் செல்வம் தான். இங்கு ஏன் சினேகன் என்று கேட்டார். அதற்கு நானே வைத்துக்கொண்ட புனைப்பெயர் என்று சொன்னதும் அவர், இந்த பெயர்தான் உன்னை மேலே உயரத்துக்கு கொண்டு போகும் என்று சொன்னார். அடுத்த நாளே நான் என்னுடைய பெயரை சினேகன் என்று கெஜட்டில் மாற்றிக் கொண்டேன்.

-விளம்பரம்-

வைரமுத்து செய்த வேலை:

என்னுடைய புத்தகத்தை கே.பாலச்சந்தர் சார் வெளியிட்டார். நான் முதன் முதலில் புத்தகம் வெளியிட நினைத்தபோது அதை வைரமுத்து சாரிடம் தான் சொன்னேன்.அதுவரைக்கும் நான் கவிதை எழுதுவேன் என்று அவருக்கு தெரியாது. நான் என்னுடைய புத்தகத்தை காண்பித்து, நீங்கள் தான் வெளியிட வேண்டும் என்று கொடுத்தேன். ஆனால், அவர் என்னை மூணு மாதமாக அலையவிட்டார். அதற்கு பிறகு வைரமுத்து ஆசியுடன் என்று பெயர் போட சொன்னார். அதற்குப்பின் ஊரில் இருந்தால் முடிந்தால் புத்தக விழாவிற்கு கலந்து கொள்கிறேன் என்று சொன்னார். இதனால் என்னுடைய ஈகோ வெளியே வந்தது. எனக்காக வர வைரமுத்து தான் வேணும், முடிந்தால் வருகிற வைரமுத்து வேணாம் என்று சொல்லிவிட்டு தான் கே. பாலச்சந்தர் சாரிடம் கொடுத்து புத்தகத்தை வெளியிட செய்தேன்.

புத்தக விழாவில் நடந்தது:

அப்போது கூட வைரமுத்து சார் இடத்தை பூர்த்தி செய்ய நான் நிறைய பேரை விழாவுக்கு அழைத்தேன். ஆனால், அவர் கடைசி வரை நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதை மேடையிலேயே கே.பி சார் சொல்லிவிட்டார். அதோடு யார் யாரோ பாட்டு எழுத வராங்க, நீ ஏன் பாட்டு எழுத கூடாது என்று கே.பி சார் சொன்னார். அதற்கு பிறகு தான் நான் பாட்டு எழுதவும் ஆரம்பித்தேன். இருந்தாலுமே கிராமத்திலிருந்து வந்த என்னை வளர்த்துவிட்ட போதி மரம் வைரமுத்து தான். என்னைப் பொருத்தவரை அவருடைய பலமும் பலவீனமும் அவர்தான். அவர் எந்த கவிஞர்களையும் மனம் விட்டோ, வாய் விட்டோ பாராட்ட மாட்டார். அதே சமயம் அவரைத் தவிர இந்த உலகில் வேறு எந்த கவிஞர்களும் இல்லை என்று நினைப்பதால் தான் அவரால் நல்ல படைப்புகளையும் கொடுக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.

Advertisement