பிரியங்கா- மணிமேகலை சர்ச்சை, எண்ணெய் ஊற்றும் வகையில் மாகாபா ஆனந்த் போட்ட செருப்பு பதிவு

0
378
- Advertisement -

விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் இன்ஸ்டா ஸ்டோரி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை செய்தி தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி 5’ நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகி இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை.

-விளம்பரம்-

.இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் , பிரியங்காவை மோசமாக விமர்சித்தும், திட்டியும் இருந்தார்கள்.

- Advertisement -

மணிமேகலை-பிரியங்கா விவகாரம்:

மறுபக்கம் சிலர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில் குரேஷி, நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்றும், பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வீடியோ போட்டு இருந்தார். அதே போல் பாவனி , டிஜே பிளாக் ,சூப்பர் சிங்கர் பூஜா, சுனிதா ஆகியோர் பிரியங்காவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை பேசி இருந்தார்கள். இதுபோல் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசுபவர்களை தாக்கி சமீபத்தில் மணிமேகலை தன் கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில், நீ வீடியோ போடலையா, whatsappல ஒரு மாதிரி பேசுறாங்க வீடியோவில் வேற மாதிரி பேசுறாங்க, சொம்புக்கு எல்லாம் என்ன மரியாதை என்றவாறு அனைவரையும் தாக்கி பேசியிருந்தார்.

மா கா பா சொன்னது:

ஏற்கனவே மா கா பா இடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர், அந்த ஷோவுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. அதனால் அதில் நான் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. நான் அங்கே இருந்திருந்தேன் என்றால், யார் கரெக்ட் யார் தப்பு என்று சொல்லுவேன். அவங்க ரெண்டு பேரும் அடிச்சுகிட்டும், நம்ம காட்டு வழியா போகும்போது ரெண்டு யானை அடித்துக் கொண்டால் அங்கு சமாதானம் எல்லாம் பண்ண நம்ம போகக்கூடாது. நம்மளை நசுக்கி போட்டுவிட்டு அது போய்விடும். அதனால் இதை நாம் தூரம் இருந்து வேடிக்கை பார்ப்பது நல்லது. அது ரொம்ப பெரிய நாட்டுக்கு முக்கியமான விஷயமும் கிடையாது என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மா கா பா இன்ஸ்டா ஸ்டோரி :

ஆனால், தற்போது தனது instagram ஸ்டோரியில், இரண்டு நாய்கள் மற்றும் ஒரு காளை சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறது போல் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில், காளை தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தாலும், இரண்டு நாய்கள் போய் அதை வம்பு இழுத்து அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு இன்ஸ்டா, ஸ்டோரியில் செருப்பு இருப்பதைப் போல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதோடு ‘சனிக்கிழமை எல்லாம் ஃப்ரீயா இருப்பாங்க சோ வீடியோ போதும் வாங்க செருப்பு போட்டோ தான் இருக்கு’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், டிஜே பிளாக் அவர்களும் மாகாபாவை தொடர்ந்து செருப்பு மற்றும் துடைப்பம் இருப்பது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ‘மா கா பா அண்ணனிடம் இருந்து இன்ஸ்பயர் ஆன விஷயம்’ என்று கூறியுள்ளார்.

நெட்டிசன்களின் கமெண்டுகள்:

அதோடு அமானுஷ்ய சக்திகளிடமிருந்து விலகி இருப்பதற்கு இதுவே சரியான வழி என்றும் கேப்ஷன் வைத்துள்ளார். இந்நிலையில், மாகாபா ஆனந்த் திடீரென்று இதுபோல் விஷயங்களை தனது ஸ்டோரியில் வைப்பதற்கு காரணம், மணிமேகலை பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்தவர்களை சொம்பு என்று மறைமுகமாக தனது வீடியோவில் குறிப்பிட்டது தான் காரணமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புவதோடு, உங்களிடமிருந்து இதுபோல் விஷயங்களை எதிர்பார்க்கவில்லை என்று கமெண்ட் செய்து மாகாபா வை திட்டி வருகிறார்கள்.

Advertisement