தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் போஸ் வெங்கட். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், திமுக தலைமை கழக பேச்சாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் 2003 ஆம் ஆண்டு மீடியாவிற்குள் நுழைந்து தற்போது வரை படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் பல நாடகங்களில் நடித்திருக்கிறார். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். சிவப்பாக பிறந்திருந்தால் இந்தியாவின் பிரதமராகி இருப்பேன் – சீமான் பேச்சு
இந்த சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு போஸ் வெங்கட் என்ற பெயரே வந்தது என்று சொல்லலாம். மேலும், இந்த சீரியல் மூலம் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. பின் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் தான் நடித்து இருக்கிறார். பின் நடிகர் போஸ் வெங்கட் அவர்கள் கன்னி மாடம் என்ற படம் மூலம் முதன் முறையாக சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
போஸ் வெங்கட் திரைப்பயணம்:
சில வருடங்களுக்கு முன் இந்த படம் வந்தது. சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது போஸ் வாழ்க்கையில் நடந்த மற்றும் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படத்தின் கதை. இது முழுக்க முழுக்க போஸ் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைப் பார்த்து திரையுலகப் பிரபலங்கள், நெட்டிசன்கள், ரசிகர்கள் என அனைவரும் பாராட்டி இருந்தார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் வசூல் செய்யவில்லை.
மா.பொ சி படம்:
தற்போது இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ம பொ சி. இந்த படத்தில் சாயா கண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு ‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என்று அர்த்தம். இந்த படத்தினுடைய போஸ்டரை சமீபத்தில் தான் பட குழு வெளியிட்டு இருந்தது. திருத்தணி என்ற ஊர் ஆந்திராவுடன் இணைய இருந்தது. ஆனால், தமிழகத்தோடு தான் இணைக்க வேண்டும் என்று போராட்டம் செய்தவர் ம பொ சிவஞானம்.
படத்தின் போஸ்டர்:
இவர் தமிழக அரசின் மேலவை தலைவராக இருந்தவர். அது மட்டும் இல்லாமல் பல நூல்களை எழுதியும் இருக்கிறார். தற்போது இவருடைய பெயரை தான் விமல் தன்னுடைய படத்திற்கு வைத்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக மா பொ சியின் பேத்தி கண்டனம் தெரிவித்து சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்னும் ம.பொ.சியைப் பலர் ம.பொ.சி (தவறே எனினும்) என்றும் அழைக்கின்றனர். உச்சரிக்கையில் குறில் நெடிலாகி அதுவே எழுத்தாகும்போது நேரும் தவறு. மா.பொ.சி என்றாலும், அவருடைய உருவமே நினைவிலெழும்.
ம பொ சி பேத்தி கண்டனம்:
போஸ் வெங்கட் இயக்கத்தில் ம.பொ.சி என்றொரு போஸ்டரைப் பார்த்தேன். தமிழ் இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சியென்று நினைத்தேன். மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானமாம். மாங்கொல்லை மயிலாப்பூரிலிருக்கும் ஒரு பகுதி; பொன்னரசனும் பொன்னுசாமியும்; கடைசிப் பெயர் சிவஞானமே. முகத்தில் மரு வைத்து மறைத்தாலும் மறைக்க முடியாதவராயிற்றே அவர். தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை நீங்கள் மதிக்கவே வேண்டாம். ஆனால், ஏன் இப்படி அவமதிக்கிறீர்கள்? நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை, சிலம்புச்செல்வரை அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டு அவருடைய கதையில்லையென்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவருடைய குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று தெரியாதா? நண்பர்கள் இதனைப் பகிர்ந்து உடனிற்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.