சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.

Advertisement

ஆனால், உண்மையில் ஒரு சில சமயத்தில் நல்ல படங்களுக்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தை விமர்சித்து இருக்கிறார்.தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

Advertisement

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை விமர்சனம் செய்து இருக்கும் மாறன் படத்தில் வடிவேலு, பஹத் சிறப்பாக நடித்தனர் இடைவெளி காட்சி நன்றாக இருந்தது. ஆனால், அதுவே பாடதிற்கு பலவீனமாக இருக்கிறது. இடைவெளி காட்சியிலேயே படத்தை முடித்து இருக்கலாம். இதனால் இரண்டாம் பாதி வேறு எதுவோ படம் பார்த்தது போல இருக்கிறது என்றும் கூறி இருந்தார்.

Advertisement

ஏற்கனவே உதயநிதி நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படம் வந்த போது அந்த படத்தை ப்ளூ சட்டை மாறன் அந்த படத்திற்கு சுமாரான விமரிசனத்தை கொடுத்து இருந்தார். மேலும், எப்போதும் படங்களை விமர்சிக்கும் போது கேலி கிண்டல் செய்யும் மாறன் அந்த படத்தின் விமர்சனத்தில் யாரையும் கடுமையாக விமர்சிக்கவில்லை. அதே போல தான் இந்த படத்தையும் மாறன் பெரிதாக விமர்சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement