தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். நேற்று உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியானதில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் பல பிரபலங்கள் இந்த படம் குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இயக்குனர் மாறி செல்வராஜ் தன்னுடைய படங்களில் சாதி பார்த்து வாய்ப்புகள் தருவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விமர்சனங்களை பற்றி மாரிசெல்வராஜ் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் “இந்த விஷயம் மிகவும் வெறுப்பான ஒன்றுதான். நான் 15 வருடங்களாக சினிமா உலகில் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். எனவே நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையில் சிலர் வரத்தான் செய்வார்கள். அதுபோன்று ஓன்று அல்லது இரண்டு விஷியங்கள் நடக்கத்தான் செய்யும்.
நான் சினிமாவிற்கு வரும் போது எனக்கு யாருமே கிடையாது. நான் கஷ்டப்பட்டதை போன்று வேறு யாரும் கஷ்டப்படவேண்டிய அவசியம் கிடையாது. எனக்கு (இயக்குனர்) ரஞ்சித் அண்ணன் ஒரு இடத்தை உருவாக்கினார். அவர் மட்டும் இல்லையென்றால் இந்த பல நல்ல படங்களை நான் செய்திருப்பேனா என்று எனக்கு தெரியவில்லை. சக மனிதர்களின் உதவி இல்லாமல் இங்கு யாராலும் வெற்றிபெற முடியாது.
ராம் மட்டும் இல்லையென்றால் இன்நேரம் நான் என்ன ஆகியிருப்பேனோ என்று அனைவர்க்கும் தெரியும் என்று தன் மீது தொடகுக்கப்படும் விமர்சனங்களுக்கு மூன்றுபுள்ளி வைத்தார் மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜ். இந்நிலையில் இந்த படமானது உதயநிதியின் திரைவாழ்க்கையில் மாபெரும் வெற்றி படமாக ரூ 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.